இந்தியாவில் YouTube-ஐப் பார்த்துக் கள்ளப்பணம் அச்சடித்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயது அப்துல் ராகிப் டில்லியில் உள்ள அவரது வீட்டில் பணத்தை அச்சிட்டதாய்ச் சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டுக் காவல்துறை கூறியது.
அவரிடம் இருந்த கள்ளப்பணத்தின் மதிப்பு சுமார் 38,000 ரூபாய் என்று நம்பப்படுவதாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
அவர் பங்கஜ் என்ற இன்னோர் ஆடவருடன் சேர்ந்து கள்ளப்பணத்தை அச்சிட்டதாகக் காவல்துறை சொன்னது. பங்கஜைக் காவல்துறை தேடி வருகிறது.
இருவரும் கள்ளப்பணத்தைக் கொண்டு பொருள்கள் வாங்க முயன்றதாகவும், அந்தப் பணம் டில்லியில் மறுக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தது. பின்னர் அவர்கள் நொய்டா நகரில் அதைப் பயன்படுத்த முயன்றதாகக் காவல்துறை சொன்னது.
-smc