இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு: 4 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில 918 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6,350 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 46 லட்சத்து, 96 ஆயிரத்து 338 ஆக இருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பினால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு பேரும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒன்று என நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 806 ஆக உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து182ஆக உள்ளது.

 

 

-th