உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் சிரப்கள் தயாரிக்கும் மரியன் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய மருத்துவ பரிசோதனை முறைமைக்கு திருப்திகரமாக பதிலளிக்க முடியவில்லை எனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மருந்து உரிம அதிகாரி எஸ்.கே. சௌராசியா கூறியதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே உத்தரபிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் உரிமத்தை ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமம் ஜனவரியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதை அடுத்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.
மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் சிரப்கள் தரமற்றவை எனக் கூறி, அவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.
இந்த மாத தொடக்கத்தில், நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டத்துடன் மற்றும் ஆய்வக சோதனைகள் நிறுவனம் கலப்படம் மற்றும் போலி மருந்துகளை உற்பத்தி செய்வதை உறுதிசெய்ததை அடுத்து, மேலும் இருவருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது.
-if