ஆன்லைன் ரம்மி – திருச்சியில் கல்லூரி மாணவர் தற்கொலை

ரம்மியால் பணத்தை இழந்த விரக்தியில் திருச்சியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், திருச்சி, மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த ரவி சங்கர் என்பவர் இன்று (மார்ச் 25) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று (மார்ச் 24) மாலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

-th