அருணாசல பிரதேசத்தில் நடந்த ஜி20 கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து சீனா மவுனம்

அருணாசல பிரதேசத்தில் நடந்த ஜி20 கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து சீனா மவுனம் சாதித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று முன்தினம் ஜி20 கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா பங்கேற்கவில்லை. அதேநேரம் இதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

அருணாசல பிரதேசத்துக்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் நடந்த ஜி20 கூட்டத்தில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கிடம், இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். ஆனால் அது குறித்து அவர் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

அவர் கூறுகையில், ‘நீங்கள் கூறும் இந்த தகவல் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து என்னுடன் பணியாற்றும் அதிகாரிகளிடம் கேட்க வேண்டும்’ என்று மட்டும் தெரிவித்தார்.

 

-dt