தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு திருநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது; வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும். புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு பிறக்கும் இந்நன்னாளில், நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கும் உவகை, மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, எல்லாம் நம் அனைவரின் வாழ்விலும், வளம் மற்றும் நலத்தை வழங்கட்டும். இந்த இனிய தருணத்தில் அனைத்து தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என் அன்புக்குரிய தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
-dt