இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 11 பேர் மரணம்

இந்தியாவில் கடும் வெப்பத்தால் 11 பேர் மாண்டுவிட்டனர்.
50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா  மாநிலத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியின்போது அந்தச் சம்பவம் நடந்தது. நவி மும்பை பகுதியில் சமூக ஆர்வலர் அப்பா சாஹேப் தர்மா திக்காரிக்கு மாநில அரசாங்க விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

2 மணிநேரம் நீடித்த நிகழ்ச்சியின் போது வெப்பம் 38 டிகிரி செல்சியஸை எட்டியதாகக் கூறப்படுகிறது. திறந்த வெளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பலருக்கு மயக்கமும் சோர்வும் ஏற்பட்டது. 120க்கும் அதிகமானோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர்.

மாண்டோருக்கு 6,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்படும் என்று மஹாராஷ்டிரா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள மாநில அரசாங்கம் முன்வந்திருக்கிறது.

இந்தியாவின் சில பகுதிகளில் இந்த வாரம் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம் என்று வானிலை ஆய்வகத்தார் முன்னுரைத்துள்ளனர்.

 

 

-sm