தெலங்கானாவில் பாக்ஸ்கான் புதிய தொழிற்சாலை – ரூ.4,000 கோடி முதலீட்டில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து அளிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தெலங்கானாவில் புதிய ஆலை அமைக்க முன்வந்துள்ளது.

ஹைதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கர் கலான் என்ற இடத்தில் பாக்ஸ்கான் இந்த ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக, 500 மில்லியன் டாலரை (ரூ.4000 கோடி) அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக திறக்கப்படும் இந்த ஆலையின் மூலமாக 25,000 மக்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ராமா ராவ் தெரிவித்தார்.

தெலங்கானா அரசு மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை சந்தைகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவும், பாக்ஸ்கான் இன்டர்கனெக்ட் டெக்னாலஜியின் உலகளாவிய விரிவாக்க உத்தியின் மைல்கல்லாக இந்த புதிய ஆலை அமைக்கப்படவுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான்உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளராக உள்ளது.

 

 

-th