இந்தியர்களுக்கு கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கல்வி, பணி, சுற்றுலா என 5 மாதங்களில் 60 ஆயிரம் விசாக்களை சீனா வழங்கி உள்ளது.
சீனாவில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில் இந்தியா உள்பட வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என சீனா அறிவித்தது.
இதன்படி, சீனாவின் பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதிக்கு முன்பு வழங்கப்பட்ட சீன விசாக்கள், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் ஜியாவ்ஜியான் இன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், சீன தூதரகம் 60 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கி உள்ளது.
அவர்கள் வர்த்தகம், கல்வி, சுற்றுலா, பணி மற்றும் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைதல் என உள்ளிட்ட நோக்கங்களுக்காக பயணம் செய்ய ஏற்ற வகையில் இந்த விசா அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவுக்கு வரவேற்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
-dt