சீன எல்லை அருகே ரூ.21,413 கோடியில் மெகா நீர்மின் திட்டம்

சீன எல்லையில் என்எச்பிசி சார்பில் கட்டப்பட்டு வரும் சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூலையில் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து நிதி இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கோயல் கூறுகையில், “சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் முதல் பிரிவு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இறுதிக்குள் அதன் 8 அலகுகளும் இயக்கப்படும்” என்றார்.

2 ஜிகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்த திட்டத்துக்கான செலவு 3 மடங்காக (ரூ.21,413 கோடி) உயர்ந்தது.

ஒரு நீர்மின் திட்டத்தை தொடங்கும் முன் பல்வேறு துறைகளிடமிருந்து சுமார் 40 அனுமதி சான்றிதழ்களை பெற வேண்டியுள்ளது.

இந்த நிலையில், கட்டுமானம் தொடங்கிய பிறகு ஏற்படும் எந்தவொரு தடங்கலும் சிக்கலான தாக மாறிவிடுகிறது என கோயல் தெரிவித்தார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான பதற்றமான எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இந்ததிட்டத்துக்கான அணைகள் உள்ளூர் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மிகவும் உதவி புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-th