இந்திய வம்சாவளியினர் எங்களுடைய மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர் – கனெக்டிகட் கவர்னர்

இந்திய வம்சாவளியினர் எங்களுடைய மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர் என கனெக்டிகட் கவர்னர் புகழாரம் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூன் 21 முதல் 24 வரையிலான நாட்களில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர்.

அவரது வருகையை முன்னிட்டு, பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், வாஷிங்டன் டி.சி.யில் இந்தியாவின் மூவர்ண கொடி உயர பறக்க விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வாஷிங்டன் டி.சி.யில் கனெக்டிகட் லெப்டினென்ட் கவர்னர் சூசன் பைசீவிக்ஸ் பிரதமர் மோடிக்கு தனது வரவேற்பை தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் ஜனநாயக விசயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளன. கனெக்டிகட்டில் ஒரு துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் இந்திய சமூகம் உள்ளது. எங்களுடைய மாகாண வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியினர் பெரும் பங்காற்றி உள்ளனர் என கவர்னர் புகழாரம் தெரிவித்து உள்ளார்.

உங்களுடைய பயணம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளுக்கும் மற்றும் இந்தியா மற்றும் கனெக்டிகட்டுக்கு இடையே ஒரு வலிமையான மற்றும் நெருங்கிய உறவுக்கான வழி ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

 

-dt