இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்

வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நாளை அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்பில் விருந்து அளிக்க உள்ளார்கள். மேலும் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். ரஷிதா தலைப் மற்றும் இல்ஹான் உமர் ஆகிய இரண்டு அமெரிக்க பெண் எம்.பி.க்களும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பிரதமர் மோடியின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்க எம்.பி இல்ஹான் உமர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறுபான்மை மதத்தினரை அடக்கி ஒடுக்குகிறது, வன்முறையில் ஈடுபடும் இந்து தேசியவாதக் குழுக்களைத் தூண்டி விடுகிறது, ஊடகவியலாளர்கள்/மனித உரிமை ஆர்வலர்களை குறிவைத்து தாக்குகிறது. எனவே பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்ட உரையின் நான் பங்கேற்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

இன்னொரு டுவீட்டில், பிரதமர் மோடியின் அடக்குமுறை மற்றும் வன்முறை குறித்து விவாதிக்க மனித உரிமை குழுக்களுடன் நான் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவேன்” என்று இல்ஹான் உமர் கூறியுள்ளார் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மினிசோடா மாகாணத்தில் இருந்து 2019ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இல்ஹான் உமர். இல்ஹான் உமர் எம்.பி. மீது அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு இந்துபோபியா இருப்பதாக (இந்துக்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாக) குற்றம்சாட்டி வருகின்றன. ஜனநாயக கட்சி எம்.பி.யான இல்ஹான் உமர், கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள்

 

-dt