கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 8 பேர் பலி, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்

டெங்கு மற்றும் எலி காய்ச்சல் காரணமாக கேரளாவில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பலவித காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் ஏராளமானோருக்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பாதித்துள்ளது.

காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.

காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மாநில சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநில சுகாதாரத்துறை புள்ளி விபரங்களின் படி மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் அங்கு எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் அதிக பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்த புரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத் தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

 

-mm