கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம்

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய வம்சாவளியினர் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக தேசிய கொடியை ஏந்தி இந்திய வம்சாவளியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இந்திய தூதரக அலுவலகத்துக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு எதிர்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘‘பாரத் மாதா கி ஜே’’, ‘‘வந்தே மாதரம்’’, ‘‘இந்தியா வாழ்க’’, ‘‘காலிஸ்தான் முர்தாபாத்’’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.மேலும், ‘‘காலிஸ்தானிகள் சீக்கியர் அல்ல’’ “கனடா காலிஸ்தானியை ஆதரிப்பதை நிறுத்துங்கள்’’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டபதாகைகளை ஏந்தி இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தேசிய கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் அரோரா கூறுகையில், “காலிஸ்தான் பிரிவினைவாதி களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்திய தூதர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படும் காலிஸ்தானியர்களின் முட்டாள்தனத்தை இத்து டன் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கனடாவில் கடந்த மாதம் காலிஸ்தான் புலிப்படைத் தலைவர்ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியாவில் உள்ளஇந்திய தூதரகங்களின் முன்பாக காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கனடா உட்பட சில நாடுகளில் உள்ள இந்திய தூதரகஅதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து இந்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்துகனடா அரசுடன் இந்திய அரசு பேசிவருகிறது.

மேலும் இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுவரொட்டிகளையும் ஒட்டினர். இதையடுத்து, அவர்களுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

-th