90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 1611 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் சீனாவில் 178 பேர் சிறைகளில் உள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைச் சேர்ந்த 8,330 பேர் 90 நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,611 பேர் சிறைகளில் உள்ளனர்.

1,222 பேர் நேபாளம், 696 பேர் கத்தார், 446 பேர் குவைத், 341 பேர் மலேசியா, 308 பேர் பாகிஸ்தான், 294 பேர் அமெரிக்கா, 277 பேர் பஹ்ரைன், 249 பேர் பிரிட்டன் ஜெயில்களில் உள்ளனர். சீனாவில் உள்ள சிறைகளில் 178 பேரும், இத்தாலியில் 157 பேரும், ஓமனில் 139 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

-mm