இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிங்கப்பூர் தூதர் பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். விண்வெளி துறையில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படும்.

இவ்வாறு சைமன் வாங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசு வட்டாரங்கள் கூறியதாவது. இஸ்ரோ விண்ணில் செலுத்திய 7 செயற்கைக் கோள்களில் டிஎஸ்-சார் செயற்கைக்கோள் முக்கியமானது. இந்த செயற்கைக்கோளை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தயாரித்து சிங்கப்பூருக்கு வழங்கியது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு தரைக்கட்டுப்பாட்டு மையத்தின்.

உத்தரவுகளை ஏற்று செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக இயங்குகிறது. இரவு, பகல் மற்றும் அனைத்து பருவ நிலைகளிலும் செயற்கைக்கோள் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. இவ்வாறு சிங்கப்பூர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

-th