இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறியதாவது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர் களுக்கு போதைப் பழக்கத்தை பாகிஸ்தான் பரிசாக அளித்து வருகிறது. பஞ்சாபிலும் இதே வேலையைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதத்தையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைமருந்து கடத்தல் தொடர்பாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது. சில முக்கிய குற்றவாளிகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (பிஎஸ்ஏ) தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் விற்பனையின் மூலமாக ஈட்டிய சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் காவல் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

போதைப் பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க சிவில் நிர்வாகமும், போலீஸாரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் போதைப்பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே காவல் துறையின் அன்பான வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு தில்பாக் சிங் தெரிவித்தார்.

 

 

-th