பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஒரு மாணவர் நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டு செல்கிறார்.
அப்போது மேலும் 2 மாணவர்கள் அவரது கன்னத்தில் பின்புறத்தில் பளார் என அடிக்கின்றனர். ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்? வேகமாக அடியுங்கள் என ஆசிரியை சொல்வது போன்று வீடியோவில் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது. அவர் நடந்த சம்பவத்திற்காக போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து பள்ளி போன்ற புனித இடத்தை நெருப்பின் சந்தையாக மாற்றுவது மோசமான செயல்.
இதை விட மோசமாக ஒரு ஆசிரியரால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் அன்பை கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-mm