உத்தரகாண்ட் டெங்கு பாதிப்ப, ரத்த தானம் செய்ய சுகாதார செயலாளர் வேண்டுகோள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை வெள்ள பாதிப்பிற்கு பின் தற்போது அங்கு டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இடைவிடாத மழை காரணமாக தண்ணீர் தேங்குவதால் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொசுக்கள்தான் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் ஆகிய நோய்களை பரப்பும்.

முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை வரை அங்கு 600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. தற்போது தொடர்ந்து பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹரித்வார், உத்தம் சிங் நகர் மற்றும் டேராடூன் பகுதிகளில் தான் மக்கள் அதிகம் பேர் இந்த வகை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்படுவதால் பொது மக்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்யுமாறு சுகாதார செயலாளர் டாக்டர். ஆர். ராஜேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

-dt