இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்காவின் டிஜிபோட்டி, பாகிஸ்தானில் கராச்சி, காதர் ஆகிய பகுதிகளில் சீன கடற்படை தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் உள்ள போக்குவரத்து சவால்களை சமாளிக்க கம்போடியாவில் ரீம் என்ற இடத்திலும் கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 150 போர்க்கப்பல்களை சீனா கடற்படையில் இணைத்துள்ளது. தற்போது 355 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுடன் உலகின் மிகப் பெரிய கடற்படையாக உருவாகி வருகிறது.
அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சீனாவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 555-ஆக உயரும் எனத் தெரிகிறது. இதனால் இந்திய கடற்படையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் தற்போது 132 போர்க்கப்பல்கள், 143 விமானங்கள், 130 ஹெலிகாப் டர்கள் உள்ளன. மேலும் 8 அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள், 9 நீர்மூழ்கி கப்பல்கள், 5 சர்வே கப்பல்கள், 2 பன்முக பயன்பாட்டு போர்க்கப்பல்கள் வரும் ஆண்டு களில் இந்தியாவில் தயாரிக்கப் படவுள்ளன.
மொத்தம் 68 போர்க்கப்பல்கள் ரூ.2 லட்சம் கோடியில் தயாரிக்க கடற்படை ஆர்டர் கொடுத்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் 155 முதல் 160 போர்க் கப்பல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2035-க்குள் கடற்படையில் 200 போர்க்கப்பல்கள் இடம் பெறவில்லை என்றாலும், குறைந்தது 175 போர்க்கப்பல்கள் இடம்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-th