டேராடூன் – முசோரி இடையே இந்தியாவின் மிக நீள ரோப் கார் சேவை

உத்தராகண்ட் மாநிலத்தில் இரட்டை நகரங்களான டேராடூன் – முசோரி இடையே மலைவழிச் சாலையில் 33 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கான பயண நேரம், வாகனப் போக்குவரத்து அடிப்படையில் ஒன்றரை மணி முதல் 3 மணி நேரமாக உள்ளது.

இந்நிலையில் 5.5 கி.மீ. தொலைவு ரோப் கார் வழித்தடம் மூலம் இவ்விரு நகரங்களையும் இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை ‘முசோரி ஸ்கை கார் கம்பெனி’ என்ற கூட்டமைப்பு தொடங்கியுள்ளது. டேராடூன் – முசோரி இடையிலான ஒன்றரை மணி நேர பயண நேரத்தை 15 நிமிடங்களாக இந்த ரோப் வழித்தடம் குறைக்கும். இந்த சேவை அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

-ht