பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்களை காப்பாற்றின: ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றின என்று ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீ ருடன் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரிலுள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லைக்குமறுபுறம் பாகிஸ்தான் நிலையில்ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், அர்னியா பகுதி மீது பாகிஸ்தான் பகுதியிலிருந்து தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன.

இதனால் அர்னியா பகுதியிலிருந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மேலும் ராணுவத்தினரால் அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பதுங்குக் குழிகளில் இறங்கி அவர்கள் உயிர் தப்பினர்.

இந்நிலையில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் தணிந்துள்ளது.

இதுகுறித்து எல்லையோர கிராமவாசியான ஏக்தா என்ற பெண் கூறும்போது, “ஆரம்பத்தில் பாகிஸ்தான் நிலைகளில் இருந்து குறைந்த அளவே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஆனால் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்குப் பின்னர் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டன. அப்போது எங்கள் வீட்டின் மீது மிகப்பெரிய குண்டு வந்து விழுந்தது. இதில் எங்கள் வீட்டின் சமையலறை நாசமானது. கடவுளின் அருளால்உயிர் பிழைத்தோம்” என்றார்.

இதுகுறித்து மற்றொரு கிராம பொதுமக்கள் கூறும்போது, “முதலில் துப்பாக்கிச்சூடு் நடைபெற்றது. அதன் பின்னர் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் நாங்கள் பதுங்குக் குழிகளுக்குள் இறங்கினோம். இல்லாவிட்டால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம்.

பதுங்கு குழிகள் மிகவும் பெரியவையாக இருந்தன. இதனால் நாங்கள் அங்கு பாதுகாப்பாக இருந்தோம். இரவு நேரத்திலும் குண்டு வீச்சு இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். ராணுவ வீரர்கள் தக்க சமயத்தில் எச்சரிக்கை செய்து எங்களை பதுங்குக்குழிக்குள் பாதுகாப்பாக அனுப்பினர். அதனால்தான் நாங்கள் உயிர்பிழைத்தோம்” என்றனர்.

 

 

 

-ht