இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தல் குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2019 முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ் தான்ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்துள்ளோம். 593 முறைஎல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஓராண்டில் மட்டும்ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதிகளுக்குள் வீசப்பட்ட 317 கிலோபோதைப் பொருள், 10 கிலோவெடிபொருட்கள், 512 ஆயுதங்கள், 56 குண்டுகள், 12 ஏகே ரக துப்பாக்கிகள், 128 கைத்துப்பாக்கிகள், ரூ.18 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப்பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.

பாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ட்ரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாபுக்குள் ட்ரோன்கள் வாயிலாகபோதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில போலீஸார் சிறப்பு படையை உருவாக்கி உள்ளனர். ட்ரோன் விவகாரம் தொடர்பாக பஞ்சாபில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

ட்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 10 மாநில போலீஸார், 3 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது தொடர்பாக தேசிய பாதுகாப்புப் படை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எல்லை பாதுகாப்புப் படை சார்பில் ட்ரோன்களை வீழ்த்தசிறப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துப்பாக்கிகள் மூலம் ட்ரோன்களை குறிவைத்து வலைகள் வீசப்படுகின்றன. வானில் பறந்து செல்லும் வலைகள், ட்ரோன்களின் இறக்கைகளை சுற்றி வளைத்து அவற்றை தரையில் விழச் செய்கின்றன.

ஜாமர் கருவி: மேலும் ஜாமர்கள் மூலம் ட்ரோன்களை இயக்குவோரின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ட்ரோன்கள் கீழே விழ செய்யப்படுகின்றன. விமானப்படை ஹெலிகாப்டர்களில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் சிறப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு ட்ரோன்கள் வேட்டையாடப்படுகின்றன. இதேபோலபாகிஸ்தானின் ட்ரோன் அச்சுறுத்தலை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

-ht