உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது: பிரதமர் மோடி

உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளித்து, இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி  அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்துள்ள திரு. மோடி, தொழில்முனைவோரின் படைப்பாற்றல் மற்றும் இடைவிடாத உத்வேகம் காரணமாக நாம் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக குரல் வேண்டும் என்று கூறினார்.

கிரண் மஜும்தார்-ஷாவின் எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது;

“உண்மையில், இந்தத் தீபாவளியை 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பைப் பற்றியதாக மாற்றுவோம். தொழில்முனைவோரின் படைப்பாற்றல் மற்றும் இடைவிடாத மனப்பான்மையால்தான் நாம் உள்ளூர்ப் பொருட்களுக்கு ஆதரவு அளித்து #VocalForLocal, இந்தியாவின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்தப் பண்டிகை தற்சார்பு பாரதத்தை அறிவிக்கட்டும்!”

 

-nm