செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மணிதர்கள் வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்தனர்.

நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காணப்படுகின்றன. எனினும் புகைப்படம் தெளிவாக இல்லாததால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். இப்போது அங்கு மனிதர்களும் வாழ முடியும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழமுடியாது என்ற முந்தைய கருத்தை பொய்யாக்கி இருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பிராணவாயுவின் (ஆக்சிஜன்) கலவையைக் கொண்டதாக உள்ளது.

இங்குள்ள இரசாயன ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆக்சிஜன் உள்ளதால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும். ஆக்சிஜன் காணப்படுவதால் அங்கு தண்ணீரும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் காணப்படவில்லை. இந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் தண்ணீர் பருவ நிலையால் உருவாகிறதா? அல்லது நிரந்தரமாக உள்ளதா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. நிலையாக தண்ணீர் இருக்குமானால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.