ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா-மலேசியா சமநிலை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா-மலேசியா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது.

சீனாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் ஆண்களுக்கான முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் சீனாவை வீழ்த்திய இந்திய அணி, ஜப்பானுக்கு எதிரான இரண்டாவது போட்டியை சமநிலை செய்தது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவை வீழ்த்தியது. நேற்று நடந்த நான்காவது போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது.