நாள்தோறும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது!

“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது பழமொழி, மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதாவது மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது.

எனவே மன அழுத்தம் உள்ளவர்கள் அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு நாள்தோறும் 15 நிமிடம் சிரித்தாலே போதும். உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்விட்டு சிரிப்பதுதான் நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும் மூச்சு வாங்க சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.