செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை!

செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கன்னட டிவி சானல் நிருபர், நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற நித்யானந்தா உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது.

நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 2004 முதல், 2010 வரை, நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்.

இவர், கன்னட டிவி ‘சுவர்ணா’வில் அளித்த பேட்டியில், “நித்யானந்தா, காவி அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல் குமுறிக் கொண்டுள்ளனர்.

அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை தொடர்பு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்” என்று கூறியிருந்தார்.