குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு

நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அஇஅதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப்போவதாகவும், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தாலும் தமிழர்களின் பிரச்சினை எதற்கும் தீர்வு காணப்படாது என்பதால் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.