செவ்வாய் கிரகத்தில் NASA எடுத்த அதிசயப் படங்கள்!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய ‘பான்காம்’ என்ற காமிராவும் நிறுவப்பட்டுள்ளது.

அந்த காமிரா செவ்வாய் கிரகத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அந்த காமிரா படம் பிடித்து அனுப்பிய 817 போட்டோக்களை ‘நாசா’ விண்வெளி மையம் சமீபத்தில் வெளியிட்டது.

அவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தின் சிவந்த நிலப்பரப்பு, மண் மற்றும் காற்றில் பறக்கும் தூசிகள், 14 மைல் அகலம் உள்ள எரிமலைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.