தீபாவளி வாழ்த்தும் 4 ஏக்கரும்!

கடந்த பல ஆண்டுகளாக புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நில பிரச்சனையை முன்னிறுத்தி நடக்கும் போராட்டத்தை  சமூக மேம்பாட்டு மையம்(CDC), தொடர்ந்து முன்னிலைப்படுத்தியும் ஆதரித்தும் வருவது நீங்கள் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக அப்போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்தவும் போராட்டத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லவும் போராட்ட வாசகங்களைக் கொண்ட தீபாவளி வாழ்த்து  அட்டைகளை வெளியிடுகிறது இவ் அமைப்பு.

புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்கும் முகமாக நீங்கள் இவ்வாழ்த்து அட்டைகளை இவ்வருட தீபாவளிக்கு வாங்கலாம்.

இவ்வாழ்த்து அட்டையை வாங்குவதன் மூலம் இன்ப தீபாவளி வாழ்த்தை நாம் நேசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அல்லல்படும் நம் சகோதரர்களின் போராட்டத்திற்கு உரத்தை அளிக்கவும் உறுதுணையாக நிற்கவும் உதவும். இவ்வாழ்த்து அட்டைகளின் ஒன்றின் விலை ரி.ம.1.00 மட்டுமே.
 
“நான்கு ஏக்கர் நிலமே போதும் எங்கள் வாழ்வை ஒளிமயமாக்க” என்ற கருப்பொருளுடனான தீபாவளி வாழ்த்து அட்டை(26.09.2011) காலை 11 மணிக்கு Ladamg Bukit Jalil, Batu 6 1/2, Jalan Puchong, KL வெளியீடு செய்யப்பட்டது
 
–   புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள்.
 
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க :
 
செம்பருத்தி  : 03 – 2698 0622 / 03 – 2691 9363