ஜெயலலிதா உருவ பொம்மை எரிக்க முயன்ற 6 பேர் கைது

Jayalalithaa2சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகில், முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை, எரிக்க முயன்ற, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர், சத்தியசீலன் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அவரை அவமரியாதை செய்ததாக கூறி, தமிழகத்தில் பல இடங்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், உருவ பொம்மைகளை அ.தி.மு.க., வினர் எரித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் தலைமையில், 6 பேர் சத்தியமூர்த்திபவன் அருகில், முதல்வர் ஜெயலலிதா, உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். சத்தியசீலன் உட்பட, 6 பேரை, அண்ணா சாலை போலீசார் கைது செய்தனர்.

TAGS: