ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Malaysia Sri Lanka Civil Warஇலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

இதேவேளை, ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று அறிவித்ததற்கும் கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 27 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

TAGS: