சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ‘லைப் ஆப் பை’ என்ற படம் சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசைஅமைப்பாளர், சிறந்த விஷுவல் எபக்ட் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்ற உலகில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுவை, மூணாறு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படம் இந்தியாவின் கதைக்களத்தை கொண்டதாகும். கடல் பயணத்தில் போது புயலால் உடைந்து போன படகில் ஒரு புலியுடன் 200 நாட்கள் பயணப்படும் இளைஞனின் கதையே ‘லைப் ஆப் பை’ ஆகும். விருதுகளைப் பெற்றவர்களுக்கு இணையான மகிழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்வரணம் பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சாய் ஸ்வரணம் முதுநிலை கணினி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, ஐடிஐயில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.