நாம் அசலா, நகலா?

தேர்வு செய்தவர்: கா. ஆறுமுகம். 

பரிசு பெற்ற ஒரு 6 நிமிட காணொளி. அசல், நகல் – எங்கும் எதிலும்.(இங்கே சொடுக்கவும்)

ஒரு பையன் வண்டியில் பழம் விற்கிறான். அவனிடம் வரும் அறிவுஜீவி போல் தோன்றும் ஒருவன் பழங்களின் விலையைக் கேட்டவாறு திராட்சைப் பழங்களை எடுத்துச் சுவைக்கிறான். கையில் பாதுகாப்பாக கனத்த புத்தகம் ஒன்றை வைத்திருக்கிறான்.

asal nagalஅதன் பிறகு அதே பையனிடம், அரசியல் செல்வாக்கு மிகுந்த இருவர் மோட்டார் வண்டியில் வந்து பழம் வாங்கி விட்டு குறைவான பணத்தைக் கொடுக்கிறார்கள்.

பழம் விற்கும் பையனுக்கும் இவர்களுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதை பரதேசி போல் உள்ள ஒருவன் தூர நின்று கவனிக்கிறான்.

இவர்களின் முகமூடியை அகற்றுகிறார் இதன் தயாரிப்பாளர். – அசல் யார், நகல் யார் என்பதை அந்த கனத்த புத்தகம் முடிவு செய்கிறது.

‘கிறுக்கர்கள் கூடம்’ தயாரித்த இதைப்பார்த்த போது மலேசியாவில் இது போல் சுற்றும் சிலர் மனதின் முன் தோன்றும் போது அதில் நமது முகமும் சாயலாக தோன்றும்.

நாம் அசலா, நகலா?  அலசுவோம் வாங்க!