ஜிவி. காத்தையா, செம்பருத்தி.காம்
மத மாற்ற பிரச்னைகளால் இந்நாட்டு இந்துக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இந்துக்களில் பலர் இப்பிரச்னை குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று இன்று காலை பத்துமலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கூறினார்.
“அண்மைய காலமாக இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற பிரச்னைதான். பலர் இப்பிரச்னை குறித்து விழிப்புடன் உள்ளனர். ஆனால், பலர் இப்பிரச்னை குறித்து அலட்சியமாகத்தான் உள்ளனர்”, என்று மோகன் ஷான் கூறினார்.
மலேசிய இந்து சங்கம் இன்னும் 16 இயக்கங்களுடன் இணைந்து இந்த “மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, பத்துமலை திருத்தலத்தில் இன்று காலை மணி 9.30 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெருமக்கள் கலந்து கொண்டனர்.
காலை மணி 8.00 லிருந்து மாநாட்டு மண்டபத்திற்கு வரத் தொடங்கிய இந்து மக்கள் இவ்விவகாரத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டனர். அவர்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர். “இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”, “நாம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவர்களின் வலையில் மாட்டிக் கொண்டு பாழாகப் போகிறோம்”, “நம்ம அரசியல் தலைவர்களை நம்பி இனியும் இருந்தால், நாம் நாசமாகி விடுவோம்”, “என்ன தைரியம் இருந்தால் இந்துக்களை அவமானப்படுத்திய மனிதனை தேர்தலில் நிறுத்தி நம்மை ஓட்டுப் போடச் சொல்வார்கள்”, “இதுதான் நம்புங்கள் என்று சொல்லி நம்முடைய கழுத்தை அறுத்து, அடையாளத்தை அழிப்பதற்கானத் திட்டம்”, “இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது” என்று அவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை காலை உணவை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அதிகமான பெண்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பிணத்தைப் பறித்துக்கொண்டு போகும் அநாகரீகம்
மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 3(1) இல் இஸ்லாம் அதிகாரப்பூர்வமான சமயம் என்றும், இதர சமயங்கள் பின்பற்றப்படுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய மோகன் ஷான், அந்த உரிமைகள் “உண்மையாகவே பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி”, என்றார்.
“திரைமறைவில் நமது உரிமைகள் நெருக்கப்பட்டு வருகின்றன. நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் தற்போதைய உண்மை”, என்று அழுத்தமாகக் கூறினார்.
இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மதம் மாறுவதைத் தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. “ஆனால், மற்ற மதங்களைவிட இஸ்லாம் மதத்திற்கு மாறும்பொழுதுதான் ஏகப்பட்ட பிரச்னைகள் தலைதூக்குகின்றன” என்று கூறிய அவர், பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.
அந்தப் பிரச்னைகளில் மனநோயாளிகளைம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்ளையும் மதம் மாற்றி விடுவதும் அடங்கும். “இதைவிட பெரிய அநாகரீகமான விஷயம் என்னவென்றால், இறந்தவர்களைக் கூட மதம் மாறி விட்டார்கள் என்று பிரேதத்தைக் கூட பறித்துக்கொண்டு போவதுதான்!”, என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் இடித்துரைத்தார்.
கண்துடைப்பு நாடகமா?
குழந்தைகளின் மதமாற்ற பிரச்னை பற்றி குறிப்பிட்ட மோகன் ஷான், அது “மனசாட்சி இல்லாமல் நடந்து வருவது வருத்தப்படும் வகையில் உள்ளது”, என்றார்.
இது சம்பந்தமான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்ட சட்ட திருத்ததையும் மக்களிடமிருந்து எழுந்த ஆட்சேபத்தின் காரணமாக அச்சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டிய அவர், இது “ஒரு கண் துடைப்பு நாடகமே!”, என்றார்.
இக்கருத்திற்குக் “காரணம் மாநிலங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுகின்றன. சிலாங்கூர், திரெங்கானு, பினாங்கு, நெகிரி செம்பிலான் – தாயும் தந்தையும். ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் – தாய் அல்லது தந்தை இப்படி ஏற்கனவே மதமாற்றச் சட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும் போது தற்போது இந்த மசோதாவை மீட்டுக்கொள்வதாக அரசாங்கம் சொன்னது வேடிக்கையாக உள்ளது”, என்று அவர் விளக்கமளித்தார்.
எல்லாவற்றுக்கும் வயது வரம்பு உண்டு. ஏன் மதமாற்றத்திற்கு இல்லை என்று அவர் வினவினார்.
“ஒரு பிள்ளை 18 வயது ஆனபின்பு தான் சுயமான முடிவை எடுக்க முடியும் என்பதுதான் சட்டம். ஆனால் ஷரியா நீதிமன்றச் சட்டம் அதற்கு மாறாக இருப்பதில் நியாயமே இல்லை எனலாம். ஓட்டுப் போடுவதற்கு 21 வயது வேண்டும். கல்யாணம் என்றால் 18 வயது வேண்டும். ஆனால் மத மாற்றத்திற்கு மட்டும் எதுவுமே தேவையில்லையாம்.
வாயளவில் உத்ரவாதம்
தனியார் உயர்நிலை கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரீகங்கள் ஒரு கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற கல்வி அமைச்சையின் அறிவிப்பு குறித்து பேசிய மோகன் ஷான் இவர்களின் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கினார்.
“புதிதாக இஸ்லாமிய, ஆசிய நாகரீகம் எனும் பாடத்திட்டத்தை தனியார் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இதனால் முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று வாயிலேயே உத்தரவாதம் தருகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
“காரணம், வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், 1987லில் கொண்டு வந்த ஷரியா சட்டத்தால், முஸ்லீம் அல்லாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று இதேபோல்தான் அன்றைய பிரதமர் வாயிலேயே உத்தரவாதம் கொடுத்தார்.
“இன்று, நாம் மாநாடு கூட்டும் அளவிற்கு பிரச்சனை பெரியதாக உள்ளது. அல்வீன் தான், விவியன் லீ என்ற இருவரையும் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று சட்ட புத்தகங்களை எல்லாம் புரட்டி பார்த்து, தண்டனை கொடுத்துவிட்டார்கள். அது தவறுதான். ஆகவே தண்டனை கொடுத்தது சரிதான். ஆனால் நம் மதத்தை பழித்தவனுக்கு?
“நம் மதத்தை இழிவாக பேசிய அந்த சூல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் ஷாஆலாமில் போட்டியிட சீட்! அந்த ஜாகிர் நாயக் என்பவனுக்கு தமிழ் வானொலி பிரிவிலேயே சந்திப்பு நேரமாம்! அதுவும் அவன் சொல்லும் கதைகளை எந்த அளவுக்கு உண்மை என்று கூட விசாரிக்காமல். இதெல்லாம் அநியாயமாக இல்லையா? இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?”, என்று மோகன் கேள்விகளைக் கொட்டினார்.
“சமயம் என்பது மனிதனை நல்வழிக்கு செல்ல நெறிபடுத்தும் ஒரு சாதனமாகும். அதுவே சுயநலத்தோடு பலரை வேதனை படுத்தும் ஒரு ஆயுதமாக மாற கூடாது”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விழிப்புணர்வு மாநாட்டில் பலர் உரையாற்றினர். அவர்களில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் அ. வைத்திலிங்கம், பிரதமர்துறை துணை அமைச்ச்சர் பி.வேதமூர்த்தி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் ஆகியோரும் அடங்குவர்.
இம்மாநாடு 12 தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது. மாநாட்டு மண்டபத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இத்தீர்மானங்களுக்குத் தங்களுடைய ஆதரவை அளித்தனர். (தீர்மானங்கள் தனியாக தரப்பட்டுள்ளன.)
அரசியல் தலைவர்களை என்ன செய்வது?
இந்த 12 தீர்மானங்களும் விரைவில் அனைத்து நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் முறையாக அனுப்பி வைக்கப்படும் என்று மாநாடு முடிவுற்ற பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மோகன் ஷான் கூறினார்.
சமயப் பிரச்னைகளைத் தூண்டிவிடும் மதவாதிகளோடு பழக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் வேளையில், அந்த மதவாதிகளுக்கு அரசியலில் இடம் கொடுத்து, பதவியிலும் அமர்த்தும் நஜிப் ரசாக் போன்ற அரசியல் தலைவர்களை என்ன செய்வது என்று செம்பருத்தி.கோம் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிப்பதில் தயக்கம் காணப்பட்டது.
“அது சரியல்ல”, என்று மோகன் ஷான் பதில் அளித்தார்.
அது சரியல்ல. அதனால்தான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்று வலியுறுத்தியும், “அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலர் சமய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தின் நடவடிக்கை 12 தீர்மானங்களை நிறைவேற்றியதோடும் அவற்றை அனுப்பி வைப்பதோடும் முடிந்து விடக் கூடாது. இவற்றை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற பொதுவான ஒரு கருத்தைத் தெரிவித்தனர்.
இந்து பெருமக்கள் இனியும் ஏமாறக்கூடாது, மோகன் ஷான்!! முதலில் மோகன் ஷான்னை நம்பக்கூடாது ,அப்பத்தான் நாக்கள் ஏமாறாமல் இருப்போம் !அது என்ன எழுத்து நாக்கு பூச்சி மாதிரி இருக்கு ??தமிழில் தான் அழகாக ஓம் என்ற சொல் இருக்கிறதே !? எங்கடா தமிழ் மொழியை குழி தோண்டி புதைக்கிறேங்க ,தமிழ் எழுத்துக்கு முக்கிய துவம் கொடுங்கடா ,வாடா நாட்டு எழுத்துக்கெல்லாம் என்ன இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேங்க !
இந்துமதத்தை காக்க வேண்டும் எனில் இந்துக்கள் யாவரும் சமம் என்பது நமது சமுதாயத்தின் பிஞ்சு மனங்களில் சிறுவயது முதலே ஆழப்பதிக்கவெண்டும். இந்துமதம் ஆலயவழிபாடு என்று மட்டும் இல்லாமல் துயரில் துவளும் இந்துக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மதம் என்பது மதம் மாற நினைப்பவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
….. உலகம் அங்கீகரித்த ஒரு முஸ்லிம் நாடு என்று எந்த சட்டதில் உண்டு ?எங்கே யாரால் எழுதப்பட்டுள்ளது என்று தெரிய விரும்புகிறேன்? யாராவது விளக்கம் சொல்லவும்? இன்னும் 50 ஆண்டுகளில் ……… மலேசியா ஒரு தனி கலப்பு இனமாகும் அப்போது எந்த மதம் ஆளுமை பெறும்? அனிமிசியம்/சிவநிசியம்/இண்டுசியம்
கிறிஸ்துவம்/இஸ்லாமியம்/ஜுவிஷ் இன்னும் பல கலந்த மனிதய கலப்பு இன்னொரு சமைத்த சமயத்தை மலேசியர்களுக்கு தரும் என்பது என் கண்ணிப்பு.
ஓம் என்ற தமிழ் எழுத்தை இந்து சங்கம் மறித்து சம்ஸ்கிருத அடையாளத்தை ஆரியன் அமகலத்தை அறியாமை என்பதா
முட்டாள் தனம் என்பதா? அம்மாம் ஆதி தமிழர்களின் சிவநிசம்
என்ன ஆனது?
சைவம்(சிவநீசியம்) இல்லாத கோவில் இந்துசியம் ஆனதோ? ஆதலால் நாக்கு பூசி நாமமோ?
MR கை குந்தா சரியான சாட்டைஅடி .. இந்த புழுவை துக்கிவீசிபோட்டு ஓம் வை .. இந்த நா… மத…ரி ..இவன பேச அலைத்துகொண்டுவர்ரவர்கள் மலாய்க்கரனின் மாமாக்கள் ..மின்னல் எப்எம்ல இந்தியாவிலிருந்து வந்த ஒருபார்பனனுக்கு கனவில பேய்வந்து மதம்மாற சொல்லிச்சாம் !!தானே oru piraamanan மதம் மாறிவிட்டேன் . ஆகவே நீங்களும் மாறுங்கள் enru minnalla சொல்கிறான் இவனுங்கள அழைத்துவந்து மின்னல் எப் எம்ல பேசவைக்கிறது மாமாக தான் .. இவர்களின் வளர்ச்சி இந்துக்களின் வீழ்ச்சி !!!!!!!!!!
இஸ்லாமியநாடுகளில் வாழகூடிய சிறுபான்மை மக்கள் நிமமதியாக சுதந்திரமாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்ல … பாகிஸ்தான் வந்க்ளாதேஷ் போன்ற நாடுகளில் கிருஸ்தவ ,இந்து பெண்களை ஆயுதமுனைல் கடத்தி மதம் மாற்றுதல் கற்பழித்தல்!!!!!!!!! செத்த பொணத்த கடைசிநேரத்தில் அதிகார ஆயுதமுனையில் பரித்துசெல்லுதல் .பெற்றகுழந்தைய தாய்டமிருந்து manithaneyamatra முறையில் துக்கிசெல்தல் .. உலகில் வேற எந்தமதத்தில் இதுபோன்று நடக்கிறதா? அன்பான இஸ்லாமிய சகோதரா மதத்தை வளர்க்க இது சரியான வழியா? இந்த காட்டுமிராண்டி செயலை அல்லா ஏற்றுகொல்கிறாரா? அல்லாமேல் உண்மையான அன்புசெலுத்தும் சகோதரனிடமிருந்து பதிலை எதிர்பார்கிறேன்
மோகன் ஷான் வெறும் வெத்து வேட்டு என்பதை மலேசியா கினி கேள்விக்கு “அது சரியல்ல”, “அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மழுப்பல் வார்த்தைகளை மட்டும் சொன்னாரே தவிர, பிரதமரையோ அல்லது தே.மு. அராசாங்கத்தையோ கன்டித்து அறிக்கை விடவில்லை. அப்படியெனில், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற கதையா இது? மக்களின் முன்னே அவேசமாக வெற்று வார்த்தைகளை வீசி விட்டு கொல்லைப் புறம் நமது சமயத்துக்கே வேட்டு வைப்பவர்களின் கையை பிடித்துக் கொண்டு உல்லாசமாக செல்வது போன்றல்லவோ உள்ளது. அறிவுரை ஊர் மக்களுக்குத்தான் தனக்கல்ல என்பதை மோகன் ஷான் நிரூபித்துள்ளார்!.
இந்துக்களை மதம் மாற்றுவது என்னவோ இஸ்லாமியர்கள் மட்டும்தான் என்ற தோரணையில் “மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” சென்றதாக தெரிகின்றது. இந்துக்களை “திட்டமிட்டு”, “நயம்பட பேசி”, “வஞ்சகமாக வலைக்குள் வீழ்த்தி” கிறிஸ்து மதத்திற்கு மாற்றப்படுவதை இந்து சங்கம் கண்டிக்கத் தவறியது ஏன்? அதி வேகமாக இந்துக்கள் மதம் மாற்றப் படுவது கிறிஸ்து மதத்திற்குத்தான் என்று இந்து சங்கம் அறியவில்லையோ? மாநாடு தடம் புரண்டு தாளம் போடுவது போல் தெரிகின்றது!
மதம் ( முக்கியமாக ) இந்து மதம் மொழி ; இனம் இரண்டுக்கும் அப்பாற்பட்டதுதானே.தமிழில் “ஓம்” என்று தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே…!!!! எல்லா காரியத்திற்கும் ” நதி மூலம் ” , ” ரிஷி மூலம் ” பார்க்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ” ஓம்” என்று தமிழில் போட்டு விட்டால் இந்து மதம் இந்த மலேசியாவில் கோலோச்சுமா..? அல்லது நம்மவர்கள்தான் இந்து மதத்தின் வல்லமையை அறிவார்களா..??? இன்னமும் கோவில்களில் ” கூத்தும் கும்மாளமும் ” அடித்துக் கொண்டு இந்து மதத்தை கேலி படுத்திக் கொண்டும் தானே இருக்கிறார்கள்.
சீர் படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.புரணி பேசுவதை விட்டுவிட்டு இந்துமத வளர்ச்சிக்கு நம்மால் ஆனதை செய்வோம். ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைப்போம்.சும்மா எடுததற்க்கெல்லாம் தமிழ் …… தமிழ் என்று ஓலம் இடாமல். இருப்பதை கொண்டு எதையாவது சாதிக்க முடியுமா என்று பார்ப்போம். இந்து மதம் தமிழர் மட்டுமே கொண்டாடும் மதம் கிடையாது. அது பல மொழி பேசும் பல நாட்டவருக்கும் சொந்தமானது. இந்தியர்களுக்கும் … இந்தோனேசிய .. தாய்லாந்து சீனா வங்காள தேசம்.. பாக்கிஸ்தான் ( இந்துகள் அங்கும் இருக்கிறார்கள் ) என்று பல நாடுகளில் வாழும் எல்லா இந்துகளுக்கும் உரியது. எனவே எல்லோருக்கும் பொதுவாக அந்த சமஸ்கிரக சொல் இருப்பதில் தவறு ஏதும் இருக்க முடியாது.” ஒரு புத்தகத்தை மதிப்பிடுபவன் அதன் முன் அட்டையை கொண்டு மதிப்பிடக் கூடாது.”
இன்று தைரியமாக பேசும் தலைவர்கள் நாளை UMNO MIC தலைவர்கள் வந்தால் வாலாட்டும் …… போல் அவர்கள் பின்னால் போய் விடுகிறார்கள். இன்று எடுக்கும் தீர்மானங்கள் பத்திரிக்கையில் வருவதில் மட்டும் தீர்வு கண்டு விட முடியாது. ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரே நோக்கத்துடன் செயல் பட வேண்டும். ஆனால் இது நடக்குமா? நமக்குள் தான் 1008 பிரச்சனை இருக்கே? இப்போது சாதி பிரச்சனை வேறு… நம்மை அந்த ஆண்டவன் ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும். .
மதம் மாறுவது ஒருவரின் தனி உரிமை ,அவனை வேறு ஒரு மதத்திற்கு மாறாமல் இருக்க ,அந்த மதக்காரன் தான் முதலில்
தன் மதத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருக்கே வேண்டும் ,
நாம் எதையுமே முழுமையாக தெரிந்துகொள்ள அக்கறை காட்டுவது இல்லை , இந்து மத்தின் அடையாளமாக ஒம் என்ற
தமிழ் எழுத்து இருக்கும் போது ஏன் இந்த பார்பனன் பாததாங்கி
ஷான் ( சண் ) சம்ஸ்கிருத எழுத்தை பயன் பத்து கிறார் ,
நம்மவர்கள் மற்ற மதத்தை தேர்வு செய்யாமல் இருக்க முதலில் இந்து மதத்தில் நாரி கிடக்கும் ஜாதியை ஒழிக்க அரசாங்கத்திற்கு
ஜாதி ஒழியுங்கள் என்று மகஜரை கொடுக்க முடியுமா ,முடியாது
நீயோ உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதியென்று கூறி தமிழனை பிரிகிறீர்கள் .இன்னும் 10,000 பெரியார்கள் வந்தாலும் உங்களை போன்ற ஜாதி வெறியர்கள் திருத்த முடியாது ,அதுவரை மத மாற்றம் தொடரும் , உன்னால் ஒன்றும் செய்ய முடியாது நைனா . ,
இந்து மதம் என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, அது அனைத்து மக்களுக்கும் உரியது என்று சொல்லிவிட்டு, சமஸ்கிருதம் புரியாத தமிழனுக்கும் அதுதான் சமயம் என்று வாதிடுவதில் அர்த்தமில்லை ரிஷி. சமயம் என்பது ஒருவருடைய மனதோடு, உணர்வோடு, மொழியோடு ஐக்கியமாகி நிற்பது. ஒருவன் இறை பக்தியில் பக்குவப் பட்டு மெய்யுணர்வில் மொழிக்கு அப்பால் செல்லும் வரை, அவரர் மொழியில் இறைவனை வணங்குவதே சாலச் சிறப்பு. புரியாத மொழியில் இறைவனை வணங்க வற்புறுத்தி விளங்காமுடிகலாகிப் போனதாலே வந்த வினைதான் இன்றைய தமிழர்களின் கோவில்களில் ”கூத்தும் கும்மாளமும்”. அதற்குத்தான், தமிழர்களால் போற்றப்பட்ட, நால்வர் பெருமக்களால் வளர்க்கப் பட்ட சைவ சமயம் ஆரியர் வரவினால் திட்டமிட்டு மறைக்கப் பட்டது. நீங்களும் உங்கள் சமயம் எது என்பதையே அறியா வண்ணம் செய்து விட்டார்கள் பார்பனர்கள். தமிழர்களின் சமயம் சைவம் என்பதை அறிக. அதன் நெறிப்படி நிற்க தமிழர்களுக்கு சைவ சித்தாந்தத்தை கற்றுக் கொடுப்போம்.
முதலில் இந்த மோகன் ஷான் குடிசித்து உளுவாம பார்க்கவும்.
ஈழத்தமிழர்கள் மலேசியாவில் 70%மதம் மாற்றபட்டுள்ளார்கள் ஐநா சபையின் மறைமுக ஆதரவுடன் !!! உண்மை உண்மை … ஈலதமிழர்கல வைத்து பணம் சேர்க்க முடியுது .. மதமாற்றத்த தடுக்க வழிதெரியவில்லை .. ஐயோ நான் செய்தபாவம் தமிலனாகபிறந்து அதுவும் வீரசைவத்தைமறந்து பார்பனன் வலையில் விழுந்தது ….
மோகன் ஷான் அவர்களே முதலில் ஆலயங்களில் முறையான சமய போதனை இருக்கிறதா என்பதனை அறிந்து அறிக்கை விடுங்கள் ஆலயங்களில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதனை ஆங்காங்கே இருக்கும் அரசு சாரா இயக்கத்தை கேட்டு பாருங்கள் உங்களுக்கு புரியும் .ஆலயங்கள் அனைத்தும் இந்து சமயத்தின் கில்தான் உள்ளதா என்பதனை விளக்குங்கள் ஆலயங்களை நிர்வாகிக்கும் நிர்வாகத்திற்கு முதலில் சமயத்தை போதியுங்கள் பிறகு ஒட்டு மொத்த சமயத்தை காக்கலாம் . சமயம் என்பது இப்பொழுது அரசியலாக உள்ள பொழுது யார் எடை செய்ய முடியும் ஆலயங்களுக்கு மானியம் இந்து சங்கம் முலமே கிடைக்க வேண்டும் இதனை செய்ய முடியுமா உங்களால் . தமிழனை தமிழனே தரம் தாழ்த்தி பார்ப்பது ஆல நிர்வாகங்கள் தான் என்பதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சமய பிரச்சனையை மாண்புமிகு வேதா அவர்கள் பிரதமரிடம் கொண்டுசொல்வேன் என்றுசொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் வேதா அவர்களே . அப்படி என்றால் உங்களுக்கு இந்து சங்க தலைமை பொறுப்பு எதற்கு . ஒரு ஆலயத்தில் உறுப்பினர் ஆக என்ன தகுதி வேண்டும் விளக்குங்கள்
குழந்தைகளின் மத மாற்றுப் பிரச்சனை மனச் சாட்சி இல்லாமல் நடைபெறுகின்றது என்று சொல்லிகிறீர்களே யாருக்கு மனசாட்சி இல்லை? அனைத்தும் இஸ்லாமியப் போதனைப்படி தானே நடக்கின்றது!
இது போன்ற மத மாற்று கருத்தரங்கில் ஆண்கள் தான் முதலில் கலந்துகொள்ள வேண்டும் . ஏன் என்றால் அவர்கள் தான் (காதல் என்ற பெயரில் காமாம் தலைக்கு ஏறிவிடுவதால்) முதலில் பலியிட படுகிறார்கள் . அதன் பிறகு குழந்தைகள் . சமஸ்க்ருதம் தேவ பாசை . அந்த தேவ பாஷையை தமிழர்கள் வெறுப்பது ஏன் என்று தான் எனக்கு இன்று வரை புரிய வில்லை . எது தேவையோ அதை அலட்சிய படுத்துவது , தேவை இல்லாதவைகளை வேண்டுவது . இஸ்லாமியர்கள் குர் ஆணை அந்த அரபு மொழியில் தான் படிகிறார்கள் அதை மாலாய் மொழியில் மொழி பெயர்த்து படிக்கவில்லை . சமஸ்கிரத அருமை தெரியாதவர்கள் காயத்ரி மந்திரத்தை பிறந்த குழந்தைக்கு காதில்
சொல்வது இல்லை போலும் நாங்கள் மருத்துவமனையிலே உபன்யாசம் (காதில் ஓதுவது ) செய்துவிடுவோம் . தமிழ் ஒரு மொழியே தவிர மதம் இல்லை . தமிழர்களே முதலில் குழந்தைகளுக்கு கோவிலுக்கு செல்லும் பொது சமய உடை உடுத்தி அழைத்து செல்லுங்கள் . ஹிந்து மதம் புனிதமான மதம் . அதை தைபுசதில் லும் திருவிழாவிலும் கொச்சை படுத்தாமல் இருந்தாலே போதும்
நானும் அந்த நிகழ்வின் கலந்து கொண்டேன். அதில் பேசியவர்கள் எதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுவதை போல இருந்தது. வேதாவின் பேச்சு சற்று தெம்பை தந்தது. அவர் கூறியது போல இந்த விசயத்தில் அரசியல் கலக்காமல் அரசியல்வாதிகள் 12.5 மில்லியன் முஸ்லிம் அல்லாதவர்கள் சார்பாக செயல்பட்டு மதவாதத்தை முறியடிக்க வேண்டும்.
ரிஷியின் கருத்தை வரவேற்கிறேன், இந்து என்ற மததாலும் , தமிழன் என்ற இனத்தாலும் ஒன்று படுவோம்.
ரிசி அருமையாக சொன்னிர்கள் விஜய குமார் ok
மங்கை அவர்களே “தேவ பாஷை” என்ன என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? தமிழர்கள் சமஸ்கிருதத்தை தானாக வெறுக்கவில்லை. மாறாக, தமிழைப் புறக்கணித்து அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தை அவர்கள் மீது விருப்புக்கு மாறாக திணித்தால் வெறுக்காமல் என்ன செய்வார்கள்? மலாய்க்காரர்கள் இஸ்லாம் மதம் தென்கிழக்கு ஆசியாவிற்கு வரும் முன் அவர்களுக்கு என்று ஆதி சமயம் இருந்ததில்லை. மொழி வளம் இருந்ததில்லை. ஆகவே,அவர்கள் அரேபியா மொழியில் இஸ்லாமிய சமயத்தை கற்றுக் கொள்ள வேண்டியது ஆயிற்று. தமிழர்களும் சைவ சமயமும் அப்படியா?
பொன் ரங்கன் எழுதுவதை கூட வெளியிடும் உங்களுக்கு மானம் ரோசம் இல்லையா? அவன்தான் உங்களை மட்டமாக எழுதியவன்.
முதலில் நம் பெரியோரின் சொன்ன “எம் மதமும் சம்மதம்” வழிமுறையை மற்றுஒம்…
THENI அவர்களே சமக்ருதம் எப்படி பட்ட மொழி என்பதை குகளில் தேடிப்பாருங்கள் . எனக்கு சில தொந்தரவுகள் (16 வயதில் ) இருந்த போது நானும் சில தமிழ் மந்த்ரங்களை ப்ரோயோகிதேன் ,
அதன் பலன் சத்தியமாக சொல்கிறேன் . எனக்கு அப்போது வேறு மதம் மாறினால் என்ன என்றே தோன்றியது . ராகவேந்திர மடாலயத்தில் சமஸ்க்ருத மொழியில் செய்த யாகமும் புஜைகளுமே இன்றும் நான் உயிரோடு வாழ காரணமா இருக்கின்றன. ஒருவர் இறந்து விட்டால் என்ன வார்த்தை சொல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அனால் என்னை போன்றவர்களுக்கு தெரியும் காரணம் நீங்கள் தமிழர் நான் ஹிந்து . குழந்தை பிறந்தாலும் குழந்தை காதில் எதையும் உச்சரிப்பதும் கிடையாது .
நாங்கள் மந்திரத்தை சொல்வோம் . எங்கள் 5 தலை முறையாக ஹிந்துவாக தான் இந்த நாட்டில் வாழ்கிறோம் . எங்கள் வம்சதிலோ இல்லை சொந்ததிலோ யாரும் வேறு மதத்தை எட்டி கூட பார்க்க எண்ணம் கொள்ள வில்லை . இது நான் வணங்கும் அம்பாள் மிது சத்தியம் செய்து சொல்கிறேன் . மத மாற்று கருத்தரங்கில் நாங்கள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை காரணம் நான் இன்று வரை என் குழந்தைகளை ஹிந்து குழந்தைகளாக தான் வளர்கிறார்கள் . எந்த கடவுளுக்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை என் குழந்தைகள் 3 வயது இருக்கும் போதே சொல்லி தர ஆரம்பித்து விட்டேன் .
இஸ்லாத்தில் உள்ள ஏழை கூட அந்த மதத்தை விட்டு வெளியே வரமாட்டார் . காரணம் அதன் அருமை அவர்களுக்கு தெரியும் . அதே போல தான் சமஸ்க்ருத மந்திரத்தின் அருமை தெரிந்தவர்கள் அதை விட மனம் வராது . இது என் அனுபவத்தில் கண்ட உண்மை . பிரணவ மந்திரத்தை புழு போல இருக்கு என்று சொல்லும் நாத்திகன் இருக்கும் இந்த பூமியும் . ……ஓம் நமோ நமஹ ..
theni அவர்களே உங்களுக்கு சமக்ருதம் பற்றி தெரிய வேண்டும் என்றால் குகளில் தேடி பாருங்கள் .
மங்கை தாங்கள் வேத பரம்பரையில் இருக்கின்றீர்கள். நானோ சைவத்தில் இருகின்றேன். ஆகவே, உங்கள் கருத்தும் என் கருத்தும் இருவரின் சமயத்துக்கும் ஒட்டி வராது. நிற்க.
மோகன் ஷான் அவர்களே ஒரு கேள்வி ?. இந்துவாக உள்ள ஒருவர் இந்து ஆலயத்தில் உறுப்பியம் பெற என்ன தகுதி வேண்டும் . இந்துவாக உள்ள ஒருவர் இந்து ஆலயத்தில் உறுப்பியம் பெறாமல் மற்ற எந்த ஆலயத்தில் உறுப்பியம் பெற வேண்டும் இதற்கு கண்டிப்பாக நீங்கள் பதில் கூர வேண்டும் .
ஏன் அடித்துக் கொள்கிறீகள் , முதலில் தமிழரான நமக்கு என்று ஒரு மதம் (திமிரு) இருக்கா என்று பாருங்கள் ,சைவ மதம் ,வைணவ மதம் தமிழர்கள் மதம் என்று கூறுவதை நான் கேட்டது உண்டு , என்னாச்சி எங்கே போச்சி , ஆரியர்கள் தமிழர் மதத்தை ஒழித்து விட்டார்கள் என்றால் அதற்கு துணையாய் இருந்தவர் மோகன் ஷான் போன்றவர்கள்தானே .
முன்பு கோவிலுக்கு சென்றேன். இப்பொழுது இல்லை. அங்கு எல்லாத்திற்கும் பணம் தான் பேசபடுகிறது. அன்பு பேசபடுவதில்லை. (அன்பே இறைவன்) இல்லை. பணமே இறைவன். மதத்தில் 3 பேர் சம்பாதிகிரார்கள். 1.உபயம், கிரகபிரவேசம், இறப்பு. 2. நேரம் பார்ப்பது. 3. சாமி ஆடுதல். மதத்தில் சில மாற்றங்கள்/கொள்கைகள் தேவை.
முருகா, sam , தமிழர்களுக்கு என்று உள்ளது சைவ சமயம். 14 மெய்கண்டச் சாத்திர நூல்களும், திருமுறைகளும், ஆகமங்களுமே நமது சமய ஆதார நூல்கள் (Authority Text). பார்பனர்கள் ஆலயங்களை ஆக்கிரமித்து தமது வருமானத்தை பெருக்க கையாண்ட வழிகளே பலவகையான வேள்வி மற்றும் யாக பூஜைகள். சைவம் வேண்டுவது, பூஜைக்கு தணிந்த நீரும் மலரும் மட்டுமே. நம் சமய நெறிகளை அறிந்து அவற்றை நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து சைவ சமயம் வளர பாடுபடுவோம் வாரீர். மங்கை அவர்களுக்கு, சைவர்கள், ஒரு குழந்தை பிறந்த பொழுதும், ஓர் உயிர் பிரியும் பொழுதும் அவர்களுடைய காதில் உச்சரிக்க வேண்டியது, “நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரம் மட்டுமே. தாங்கள் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது வேத மரபினருக்கு ஏற்றதே. உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள், எங்களையும் வாழ விடுங்கள்.
மனிதனுக்கு தகுதி இலாத பேர் அவனுக்கு இனொரு …றை காத்திருகிறது
தேனீ உங்களைப் போன்றவர்களுக்கு எப்படி வாழ்வது என்று சொன்னாலும் புரியாது சொந்தமாகவும் தெரியாது. தமிழர்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று சில கோவில்களிலும், தைப்பூசத்திலும், திருவிழாவிலும் கண்கூடாக பார்க்கிறேன். வாழ்க உங்கள் கோட்பாடு இல்லாத சமயம். நிற்க
மங்கை உங்கள் பார்பனன் வந்து இந்து மதத்தை(வைதீக மதம்) தோற்றுவிக்கும் முன்னாடியே தமிழர்கள் சைவ சமயத்தவர்.. தைப்பூசம் திருவிழாக்களில் நடக்கும் கூத்துக்கள் உங்களைபோன்ற இனம்தெரியாதவர்கள் செய்யும் செயல் .. தமிழரல்லாத இந்தியர்கள் தமிழரோடு கலந்து மொழியையும் கலாசாரத்தையும் சீரழித்தது மட்டுமல்லாமல், தமிழன் மட்டும் இந்தியனாகவே இருக்கனும்.. ஆனால் நீங்கள் உங்கள் இன அடையாளத்தோடு இருப்பீர்கள். நீங்கள் நடத்தும் வியாபாரத் தலங்களில் வேலையாட்கள் எடுக்கும்போது ஊருகாரராக இருந்தாலும் உங்கள் இனமாக இருக்க பார்த்துஎடுக்கிறீர்கள்.. தமிழன் மட்டும் கோயில்மாடாக இருக்கனும்..கூடிய சீக்கிரம் தமிழ் கல்விமான்கள் இதையெல்லாம் சரிபன்னுவார்கள்.. தமிழர் வழிபாட்டு முறை தெரியாத பெற்றோர்கள் தமிழ்நெறி கழகம், மலேசிய சைவ நற்பனி மன்றத்தாரை தொடர்புகொண்டு தெளிவுபெற்று வாழவும் ..
நாம் எது செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கிறதை ஒரு தொழிலாக கொண்டு உள்ளோம். இவர்களும் முயற்சி செய்யமாட்டார்கள் யாரும் முயற்சி செய்தால் குறை கண்டு பிடிப்பார்கள். இது வரை எங்கே ஐயா போனீங்க? செய்பவருக்கு தடை இல்லாமல் தவறோ சரியோ நல்ல விசியதுக்கு துணை நிப்போம். நம் சமுதாயத்துக்காக, நம் மக்களுக்காக. எது எடுத்தாலும் குற்றமா? இந்து சங்க உறுபினராக சேருங்கள் பின் கேள்வி எழுப்புங்கள். இப்படியே குற்றம் சொல்லியே தமிழன் பிரிந்து உருப்படி இல்லாமல் போயாச்சி. மத மாற்றம் ஒரு பெரும் பிரச்சனை. இடை விட்டால் வரும் நம் சங்கதிகள் இல்லாமல் போய்விடுவார்கள். இஸ்லாம் மற்று கிருஸ்துவர்களும் தான். இப்பொழுதே தடுத்து நிறுத்தாவிட்டால் பின் விளைவு மிக மோசமடையும். தயவு செய்து குறை கூறாமல் நம்மால் என்ன செய்ய முடியுமோ விரைவில் செய்வோம். இது எல்லோருடைய பிரச்சனை. இது எல்லோருடைய கடமை… இந்து சங்கத்தின் கடமை மட்டும் இல்லாமல் இது ஒஹ்வொரு தமிழனின் கடமை… நன்றி
ஆமாம் மோகன் ஷான் சொன்னதைக் கேட்டுப்புட்டு அப்படியே இந்தச் சமுதாயம் திருந்திரும்ல! அவனவனா யோசிச்சித் திருந்துனாத்தான் உண்டு!
பொன் ரங்கா, கொஞ்சம் அமைதி காத்தால் நல்லது!
யப்பா..யப்பா…. கொஞ்ச நேரத்துல இம்புட்டுப் பிரச்சனையா..எஸ்கேப்ப்ப்ப்ப்.. வாழ்க இந்து மதம்..கை குந்தா, உங்க பேரை கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லாயிருக்கும் தம்பி…
யாரையா இந்த கை குந்தா ??லொள்ளு பிடிச்சவனா இருப்பான் போலிருக்கே…???
ஹிந்து மதத்தை அழிப்பது வேறு யாரும் இல்லை. நாமேதான் நமக்கு எதிரி. வேறு யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. காரணம் ஹிந்துன்னா நமக்கே இன்னும் என்ன வென்று சரி வர தெரியல. ஹிந்து மதத்தையும் சமஸ்கிருதத்தையும் பிரிக்க முடியாது. சமஸ்கிருதம் வடநாட்டு மொழிஅல்ல. இது இறைவனுடைய மொழி என்பதை ஹிந்து சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வேதம் ஹிந்துமந்திரம். இவைகளை நம் இளைய சமுதாயத்திற்கு கொண்டுப் போய் சேர்க்க வேண்டியது நமது எல்லாருடைய கடமை. இதுதான் அடிப்படை விஷயம். இஸ்லாமியர்கள் எப்படி குரானை அரேபிய மொழியில் ஓதுகிறார்களோ அதேபோல் நாமும் வேதங்களை சமஸ்கிருதத்தில் ஒத கற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தையும் சமஸ்கிருதத்தையும் பிரிக்க முடியாது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அம்மா செம்பகம் “இந்து மதம்” என்ற வார்த்தை முளைத்ததே 1794-ம் ஆண்டுதான். அன்று இந்தியா முழுவதையும் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயன் இந்தியாவில் உள்ள சமயங்களை எப்படி சட்டத்தில் எழுதுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்ததுதான் ‘Hindu Personal Law’ என்ற சட்டம். இதற்க்கு முன்னர் இருந்தது, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சமயப் பிரிவுகளை கொண்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். இதில் ஆறு சமயங்கள் பெரும்பான்மையான இந்தியா நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அவை முறையே, சைவம் (தென்னாட்டில்), வைணவம் (வடநாட்டில்), கௌமாரம், சாக்தம், காணபத்தியம், சவுரம் என்பன. ஆதி சங்கரர், இத்தகைய ஆறு சமயங்களைச் சார்ந்தவர்களிடம் ஒற்றுமையை நிலைநிறுத்த ‘என் மதம் சன் (6) மதம்” என்ற கொள்கையை நிறுவினார். இது நடந்தது 7-ம் நூற்றாண்டில். தொடரும்.
அதற்குப் பிறகு தான், பார்பனர்கள் ஆலயங்களில் கோலோச்சிய காரணத்தினால் தென்னாட்டில் வேத மரபைச் சார்ந்த நெறிகளை இந்து மதம் என்ற போர்வையில் தென்னாட்டு மக்களிடையே பரப்பினர். சைவ சமய நெறிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. இதனாலே, வேதம் வாழ்ந்தது, சைவம் வீழ்ந்தது. வேத மரபை பின்பற்றுபவர்களுக்கு சமஸ்கிருதம் “தேவ பாசை” இருக்கலாம். சைவ சமயத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு தமிழே “தேவ பாஷையாம்”. இரண்டையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் தங்களை தாங்களே குழப்பிக் கொள்ளவேண்டாம். கருத்து எழுதும் முன் கொஞ்சம் இந்திய வரலாற்றையும் படித்து விட்டு வாருங்கள்
ஆதி சங்கரர் காலம் 17-ம் நூற்றாண்டு என்று திருத்திக் கொள்ளவும்.
எந்த பழைய தமிழ் இலக்கியங்களிலும் சிவன்..பிள்ளையார் ..பார்வதி ..முருகன் வழிபாடு பற்றி சொல்லவில்லை ….சூரிய வழிபாடு பற்றி மாத்திரமே சொல்லப் பட்டுள்ளது …உண்மையில் இன்று வழங்கும் கதைகள் சிவன்-பார்வதி அவர்கள் பிள்ளைகள் எல்லாம் ..ஆரிய கண்டுப்பிடிப்பே…பொங்கல் தவிர …மற்ற பண்டிகைகளுக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது ..கிரிகைகள் …எல்லாம் பிராமணர்களால் …இலகுவாக பணம் சம்பாதிக்க ..உண்டாக்கபட்டவை ….தமிழர்கள் இன்னும் ஏமாளிகளாக ஆரிய கடவுள்களையும் …கிரிகைகளையும் பின்பற்றுகின்றோம்
மந்திரம் சொன்னால் தான் பிறக்கும் குழந்தையும் இறக்கும் மனிதனுக்கும் நன்மை என்று சொல்வார்கள் சிலர். இதற்கு விதி விலக்காய் சித்தர் ஒருவர் சொல்கிறார் “மந்திரம் சொல்லி நீர் மயங்குகின்ற மாந்தரே, மந்திரம் சொல்லும் நீர் மரித்த போது சொல்விரோ, மந்திரம் உம்முள்ளே மதித்த நீரும் உம்முள்ளே, மந்திரம் என்பது மனதின் ஐந்து எழுத்துமே”. இதை தெரியாமல் புரியாத பாஷையில் மந்திரம் சொல்லி என்ன பயன்?
தேனீ, ஆதி சங்கரர் வாழ்ந்தக் காலம் 17அம் நுற்றாண்டாக இருக்க முடியாது, ஏன் என்றால் 17ஆம் நுற்றாண்டில் வாழ்ந்தவர் ராகவேந்திர சுவாமிகள். ஆதி சங்கரர் 2ஆம் நுற்றாண்டு அல்லது அதற்கு முன்பு வாழ்ந்தவராக தான் இருக்க முடியும்.
மன்னிக்கவும். ஆதி சங்கரர் காலம் 7-ம் நூற்றாண்டு என்று திருத்திக்கொள்ளவும்.
இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வாழ்ந்து, இந்துவாகவே இறப்போம் என்று ஒவ்வொரு இந்து மக்களும் கொள்கையுடன் வாழ வேண்டும்