ஜிவி. காத்தையா, செம்பருத்தி.காம்
மத மாற்ற பிரச்னைகளால் இந்நாட்டு இந்துக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இந்துக்களில் பலர் இப்பிரச்னை குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று இன்று காலை பத்துமலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கூறினார்.
“அண்மைய காலமாக இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற பிரச்னைதான். பலர் இப்பிரச்னை குறித்து விழிப்புடன் உள்ளனர். ஆனால், பலர் இப்பிரச்னை குறித்து அலட்சியமாகத்தான் உள்ளனர்”, என்று மோகன் ஷான் கூறினார்.
மலேசிய இந்து சங்கம் இன்னும் 16 இயக்கங்களுடன் இணைந்து இந்த “மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, பத்துமலை திருத்தலத்தில் இன்று காலை மணி 9.30 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெருமக்கள் கலந்து கொண்டனர்.
காலை மணி 8.00 லிருந்து மாநாட்டு மண்டபத்திற்கு வரத் தொடங்கிய இந்து மக்கள் இவ்விவகாரத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டனர். அவர்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர். “இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”, “நாம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவர்களின் வலையில் மாட்டிக் கொண்டு பாழாகப் போகிறோம்”, “நம்ம அரசியல் தலைவர்களை நம்பி இனியும் இருந்தால், நாம் நாசமாகி விடுவோம்”, “என்ன தைரியம் இருந்தால் இந்துக்களை அவமானப்படுத்திய மனிதனை தேர்தலில் நிறுத்தி நம்மை ஓட்டுப் போடச் சொல்வார்கள்”, “இதுதான் நம்புங்கள் என்று சொல்லி நம்முடைய கழுத்தை அறுத்து, அடையாளத்தை அழிப்பதற்கானத் திட்டம்”, “இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது” என்று அவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை காலை உணவை அருந்திக் கொண்டே பேசிக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அதிகமான பெண்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பிணத்தைப் பறித்துக்கொண்டு போகும் அநாகரீகம்
மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 3(1) இல் இஸ்லாம் அதிகாரப்பூர்வமான சமயம் என்றும், இதர சமயங்கள் பின்பற்றப்படுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய மோகன் ஷான், அந்த உரிமைகள் “உண்மையாகவே பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி”, என்றார்.
“திரைமறைவில் நமது உரிமைகள் நெருக்கப்பட்டு வருகின்றன. நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் தற்போதைய உண்மை”, என்று அழுத்தமாகக் கூறினார்.
இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மதம் மாறுவதைத் தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. “ஆனால், மற்ற மதங்களைவிட இஸ்லாம் மதத்திற்கு மாறும்பொழுதுதான் ஏகப்பட்ட பிரச்னைகள் தலைதூக்குகின்றன” என்று கூறிய அவர், பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.
அந்தப் பிரச்னைகளில் மனநோயாளிகளைம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்ளையும் மதம் மாற்றி விடுவதும் அடங்கும். “இதைவிட பெரிய அநாகரீகமான விஷயம் என்னவென்றால், இறந்தவர்களைக் கூட மதம் மாறி விட்டார்கள் என்று பிரேதத்தைக் கூட பறித்துக்கொண்டு போவதுதான்!”, என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் இடித்துரைத்தார்.
கண்துடைப்பு நாடகமா?
குழந்தைகளின் மதமாற்ற பிரச்னை பற்றி குறிப்பிட்ட மோகன் ஷான், அது “மனசாட்சி இல்லாமல் நடந்து வருவது வருத்தப்படும் வகையில் உள்ளது”, என்றார்.
இது சம்பந்தமான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்ட சட்ட திருத்ததையும் மக்களிடமிருந்து எழுந்த ஆட்சேபத்தின் காரணமாக அச்சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டிய அவர், இது “ஒரு கண் துடைப்பு நாடகமே!”, என்றார்.
இக்கருத்திற்குக் “காரணம் மாநிலங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுகின்றன. சிலாங்கூர், திரெங்கானு, பினாங்கு, நெகிரி செம்பிலான் – தாயும் தந்தையும். ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் – தாய் அல்லது தந்தை இப்படி ஏற்கனவே மதமாற்றச் சட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும் போது தற்போது இந்த மசோதாவை மீட்டுக்கொள்வதாக அரசாங்கம் சொன்னது வேடிக்கையாக உள்ளது”, என்று அவர் விளக்கமளித்தார்.
எல்லாவற்றுக்கும் வயது வரம்பு உண்டு. ஏன் மதமாற்றத்திற்கு இல்லை என்று அவர் வினவினார்.
“ஒரு பிள்ளை 18 வயது ஆனபின்பு தான் சுயமான முடிவை எடுக்க முடியும் என்பதுதான் சட்டம். ஆனால் ஷரியா நீதிமன்றச் சட்டம் அதற்கு மாறாக இருப்பதில் நியாயமே இல்லை எனலாம். ஓட்டுப் போடுவதற்கு 21 வயது வேண்டும். கல்யாணம் என்றால் 18 வயது வேண்டும். ஆனால் மத மாற்றத்திற்கு மட்டும் எதுவுமே தேவையில்லையாம்.
வாயளவில் உத்ரவாதம்
தனியார் உயர்நிலை கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரீகங்கள் ஒரு கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற கல்வி அமைச்சையின் அறிவிப்பு குறித்து பேசிய மோகன் ஷான் இவர்களின் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கினார்.
“புதிதாக இஸ்லாமிய, ஆசிய நாகரீகம் எனும் பாடத்திட்டத்தை தனியார் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இதனால் முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று வாயிலேயே உத்தரவாதம் தருகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
“காரணம், வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், 1987லில் கொண்டு வந்த ஷரியா சட்டத்தால், முஸ்லீம் அல்லாதவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று இதேபோல்தான் அன்றைய பிரதமர் வாயிலேயே உத்தரவாதம் கொடுத்தார்.
“இன்று, நாம் மாநாடு கூட்டும் அளவிற்கு பிரச்சனை பெரியதாக உள்ளது. அல்வீன் தான், விவியன் லீ என்ற இருவரையும் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று சட்ட புத்தகங்களை எல்லாம் புரட்டி பார்த்து, தண்டனை கொடுத்துவிட்டார்கள். அது தவறுதான். ஆகவே தண்டனை கொடுத்தது சரிதான். ஆனால் நம் மதத்தை பழித்தவனுக்கு?
“நம் மதத்தை இழிவாக பேசிய அந்த சூல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் ஷாஆலாமில் போட்டியிட சீட்! அந்த ஜாகிர் நாயக் என்பவனுக்கு தமிழ் வானொலி பிரிவிலேயே சந்திப்பு நேரமாம்! அதுவும் அவன் சொல்லும் கதைகளை எந்த அளவுக்கு உண்மை என்று கூட விசாரிக்காமல். இதெல்லாம் அநியாயமாக இல்லையா? இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?”, என்று மோகன் கேள்விகளைக் கொட்டினார்.
“சமயம் என்பது மனிதனை நல்வழிக்கு செல்ல நெறிபடுத்தும் ஒரு சாதனமாகும். அதுவே சுயநலத்தோடு பலரை வேதனை படுத்தும் ஒரு ஆயுதமாக மாற கூடாது”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விழிப்புணர்வு மாநாட்டில் பலர் உரையாற்றினர். அவர்களில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் அ. வைத்திலிங்கம், பிரதமர்துறை துணை அமைச்ச்சர் பி.வேதமூர்த்தி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் ஆகியோரும் அடங்குவர்.
இம்மாநாடு 12 தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது. மாநாட்டு மண்டபத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இத்தீர்மானங்களுக்குத் தங்களுடைய ஆதரவை அளித்தனர். (தீர்மானங்கள் தனியாக தரப்பட்டுள்ளன.)
அரசியல் தலைவர்களை என்ன செய்வது?
இந்த 12 தீர்மானங்களும் விரைவில் அனைத்து நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் முறையாக அனுப்பி வைக்கப்படும் என்று மாநாடு முடிவுற்ற பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மோகன் ஷான் கூறினார்.
சமயப் பிரச்னைகளைத் தூண்டிவிடும் மதவாதிகளோடு பழக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் வேளையில், அந்த மதவாதிகளுக்கு அரசியலில் இடம் கொடுத்து, பதவியிலும் அமர்த்தும் நஜிப் ரசாக் போன்ற அரசியல் தலைவர்களை என்ன செய்வது என்று செம்பருத்தி.கோம் முன்வைத்த கேள்விக்கு பதில் அளிப்பதில் தயக்கம் காணப்பட்டது.
“அது சரியல்ல”, என்று மோகன் ஷான் பதில் அளித்தார்.
அது சரியல்ல. அதனால்தான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்று வலியுறுத்தியும், “அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலர் சமய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தின் நடவடிக்கை 12 தீர்மானங்களை நிறைவேற்றியதோடும் அவற்றை அனுப்பி வைப்பதோடும் முடிந்து விடக் கூடாது. இவற்றை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற பொதுவான ஒரு கருத்தைத் தெரிவித்தனர்.
வள்ளுவர் தமிழைக்கூட மொழி பெயர்த்தால்தான் தமிழர்களுக்கு புரியும் பொது சமஸ்கிருதம் எப்படி புரிய போகிறது. ஆந்திர மக்கள் முருகனை வழிபடுவது கிடையாது . உங்களோடு சேர்ந்து அவர்களும் பால் ஊற்றுகின்றனர். மலையாளிகளும் முருகனுக்கு பால் குடம் தூக்குவது கிடையாது. முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரை மட்டும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்து வணங்கலாமே. ஏன் அதை கூடா நீங்கள் செய்வதில்லையே. அடுத்தவர் மிது பழி போடுவதை நிறுத்தி அடுத்த வருட தைப்பூசத்தில் தமிழிலே மந்திரம் படிக்கவும்! ஐயா தேனீ அவர்களே உங்கள் ஆராய்ச்சியில் ஈயத்தை காச்சி ஊத்த. சமஸ்கிரதம் தாய் பாஷை போன்றது.
சமசுகிருதம் என்பதன் பொருள் (இலட்சணம்/இலக்கணம்[3]) சமசுகிருதம் பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, ஸௌரசேனி, பைஸாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய சமசுகிருதத்திலிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது. இம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால சமசுகிருதம் ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.
வேதங்களும், தொன்மையான சமஸ்கிருத நூல்களும் எழுதப்பட்ட வேதகால சமசுகிருதமே இம் மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் மத்தியில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் சமசுகிருதம், சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த சமசுகிருதத்தின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் ஆரம்பத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான சமசுகிருத இலக்கணம் பாணினியின் உ. கி.மு 500 அஷ்டாத்தியாயி (“8 அத்தியாய இலக்கணம””). காப்பிய சமசுகிருதம் என்று அழைக்கப்படும் ஒரு சமசுகிருத வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.
மங்கை அவர்கள் கொஞ்சம் தமிழராகவும், தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், தமிழர் மார்க்கம் ‘சைவ சமயம்” பற்றியும் எழுதி, தமிழ் மக்களின் மத்தியில் தழைத்தோங்கி வாழ வாழ்த்துகிறேன்! நீங்கள் ஹிந்து மதத்துக்கு மாறியது எனக்கு வருத்தமே! சகோதரி ஹிந்து மகள் அவர்களே ! ஹிந்து என்பது இனம் கிடையாது! அது ஒரு மதம் மட்டுமே! இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் இனம் என்று ஒன்று இருக்கும் (களப்பு இனம் உட்பட)! எனக்கு இனமே இல்லை மத அடிப்படையில் மட்டும் வாழ்கிறேன் என்று சொல்லும் மனிதர்களை மதமயக்கத்தில் உள்ளவர்கள் என்றோ அல்லது மூடர்கள் என்றோ வகை படுத்தப்பட வேண்டியவர்கள்! நமது சமய நூல்களை படித்து, தமிழராகவும் சைவ சமயத்தில் வாழ்ந்து இறவனடியை சேருங்கள்! அப்படி நீங்கள் தமிழர் அல்லாதவராக இருந்தால் உடனே தமிழர்களை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் இனத்துக்கான ஆக்ககரப் பணியில் ஈடுபடவும்! தமிழர்களை சீண்டிப்பார்க்கும் செயலை நிறுத்தவும்!
“முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரை மட்டும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்து வணங்கலாமே. ஏன் அதை கூட நீங்கள் செய்வதில்லையே. அடுத்தவர் மிது பழி போடுவதை நிறுத்தி அடுத்த வருட தைப்பூசத்தில் தமிழிலே மந்திரம் படிக்கவும்!”
மலேசியா அர்ச்சகர்கள் சங்க உறுபினர்களே, ஐயா பத்து மலை நடராஜர் அவர்களே கேட்டீர்களா மங்கையின் சவாலை? முருகன் உண்மையாக, சத்தியமாக தமிழரின் தெய்வம் என்றால் முருகனுக்கு உடனே தமிழில் அர்ச்சனை செய்யுங்கள், ஐயா முருக பக்தர்களே, முருக கடவுளுக்கே முதன் முதலில் மாநாடு நடத்தியவர்களே நீங்களும் இந்த சவாலை எற்றுக் கொண்டு, முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யுங்கள். இல்லையேல், இதை விட கேவலமாக முருகனை விமர்சிக்க மங்கையைத் தவிர வேறு யாராலும் முடியாது!
மங்கை, உங்கள் கருத்துக்களின் வழி நீங்கள் ஒரு வேத மரபைச் சார்ந்த தமிழர் அல்லாதவர் என்பதை உர்ஜிதப் படுத்தி விட்டீர்கள். ஆகவே, நீங்கள் இதற்க்கு பின் தமிழர்களை தரம் கெட்டவர்கள் என்று விமர்சித்தால், எங்களின் விமர்சனமும் கடுமையாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.
ஆமாம் மங்கை, சூத்திரர்கள் வேதத்தைக் காதால் கேட்டால் அவர்கள் காதில் “ஈயத்தைக் காய்ச்சி ஊத்த வேண்டும்” என்று உங்கள் வேதத்தில் இருப்பதை அப்படியே இங்கே ‘verbatim’-ஆகா ஊத்தி இருக்கின்றீர்களோ? திருக்குறளை தமிழிலே படித்து நாங்கள் அறிந்துக் கொள்ள அறிவு படைத்தவர்கள் என்பதை இங்கே கருத்து கூறும் விதத்திலேயே உங்களுக்குத் தெரியும். உங்களில் பலருக்கு உங்கள் தாய்மொழியே படிக்கத் தெரியாமால் ததிகினத்தோம் போட்டுக் கொண்டு இருப்பதை மறந்து எழுதுகின்றீர்கள். முடிந்தால் அவர்களுக்கு கொஞ்சம் சமஸ்கிருதம் வகுப்பை நடத்துங்கள். உங்களில் எத்தனைப் பேருக்கு புரிகின்றது என்று பார்ப்போம்.
மங்கை உமக்கு வேதம் சொல்லித்தரும் பார்பனர்கள் வாழ்கையை பாரும். மற்றும் இந்திய திரைப்படத்தில் தமிழ் படங்களைத் தவிர்த்த அனைத்து மொழிபடத்திலும் ஆபாசம் நிறைந்து இருக்கும் …. அப்படி சிலநேரம் தமிழ்படங்களில் ஆபாசம் இருந்தால் அது தமிழை பிழைப்புக்காக கற்ற டமிலன்களால் ஏற்படுகிறது. கப்பலேரும்போது தமிழனின் ஆதரவோடு அனுசரிப்போடு மஞ்சப் பையோட ஒட்டிக் கொள்கிறீர்கள்… அப்புறம் எங்கள் மொழியை கற்று… எங்களையே கேவல படுத்துகிறீர்… வேதம் கற்ற சங்கராச்சாரி ஒரு கொலைகாரன். நித்தியானந்தா பொம்பளபொருக்கி… வேதத்தையே முழு நேரமா ஓதிக்கிட்டிருந்த கோயில் குருக்கள் பார்ப்பனன் ஒருவர் காஞ்சிபுரத்திலே கோயில் கருவறையிலேயே பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை நாடே அறியும்! பார்ப்பனர்கள் பணத்துக்காக அதிகராத்துக்காக பல இழிந்தக் காரியங்களை செய்தவர்கள் என்று… நானா சொல்லவில்லை வரலாறு சொல்லுதம்மா!
மங்கை, உங்களுடைய சம்ஸ்கிருத அறிவை வீணடிக்கிறீர்கள். கூகலிள் தேடிப் பாருங்கள் என்று நீங்கள் சொல்லும் போதே உங்களின் சம்ஸ்கிருத புலமையை நாங்கள் அறிந்து கொண்டோம். சமஸ்கிருதம் தேவ பாஷை என்பதில் எங்களுக்குப் பொறாமை இல்லை. தமிழ் தெய்வ மொழி என்பதே எங்களின் நிலைப்பாடு. இதற்கு ஆதாரம் இங்கே தேடாதீர்கள். இங்கு, உங்களைப் போலவே நாங்களும் அரைகுறைகள் தான். நீங்கள் செல்ல வேண்டிய இடம் சமய அறிஞர்கள். சமய அறிஞர்கள் ஆறு. நாகப்பன், டாக்டர் பால தர்மலிங்கம் போன்றவர்களைத் தான் நீங்கள் அணுக வேண்டும். அவர்கள் நீங்கள் கூகலிள் தேட வேண்டாம். உங்கள் பக்கத்திலயே இருக்கிறார்கள். இங்கே உங்கள் புலமையைப் பாராட்ட ஆளில்லை! ஏன் இந்த வீண் வேலை?
மங்கை தமிழில் கொங்கை என்றால் என்ன என்று புரியாத நீங்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்கிறிர்கள்… தமிழ் மொழியை வேசி பாஷை என்று அப்பொழுது இருந்த சங்கராச்சாரியார் சொன்ன வரலாறு உமக்கு தெரியுமா….? ஆமாம் ஜப்பான்கரன் அமெரின்காகாரன் சீனாக்காரன் ரஷியாகரன் கொரியாகாரன் ஜெர்மன்காரன் இவங்க குழந்தைங்களுக்கு என்ன காயத்திரி மந்திரம் ஓதியா முன்னேறி இருக்காங்க… உம்மை போல் தெளிந்த நல அறிவு இல்லாத மூடர்களால் இந்த சமுகம் முன்னேற முடியாமல் உள்ளது! நீ தமிழர் அல்லாதவர் என்று தெரிந்துவிட்டது! உனக்கு தமிழர் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது மாதிரி எங்கள் மொழியையும் இனத்தையும் பன்பாட்டையும் கேவலப்படுத்தி எழுதுகிறாய்! இதை இத்தோடு நிறுத்திவிடு!
பார்பனனின் சமஸ்கிரத மொழியும், அவன் கொண்டுவந்த ஹிந்து மதமும் எங்களுக்கு தேவை இல்லை, நாங்கள் தமிழர்கள் எங்கள் மொழி தமிழ், எங்கள் சமயம் சைவ சமயம், மொழிக்கு கடவுள் முருகன் ,மாரியம்மன் (மழை தாய் ) எல்லை காவல் தெய்வம் (சிறு தெய்வ வழிபாடு )ஐயனார், முனியாண்டி, முனிஸ்வரன், மதுரை வீரன், தமிழ் சித்தர்கள் வணங்கியது சிவம் (ஆன்மா, பரமாத்மா) கவனிக்கவும் சிவம், சிவன் அல்ல, பார்பனனின் கண்டுபிடிப்புதான் சிவன், பார்வதி, விநாயகன் அவருடைய தம்பி சுப்ரமனியர்! இன்னும் ஏகப்பட்ட ஹிந்துக்கடவுள் தொடர்கின்றன! இவர்கள் எங்கள் கோவில்களிலும், மொழியிலும் புகுந்து விட்டு எங்களையே இளக்காரம் செய்கிறார்கள்! உண்மை தமிழன் என் மனக் குமுறலை அறிவான்! இன்னும் விளக்கம் வேண்டுமா? நான் தயார்!
தமிழர் நந்தா அவர்களே, தங்களது கருத்துக்களுக்கு உண்மை சான்றுகள் சேர்த்தால் நன்றாக இருக்கும். நன்றி
திரு. மோகன் அவர்களே நீங்கள் என்னாத்த பெரிசா சாதிச்சிட்டிங்கள்?
திரு.குமார் அவர்களே, அவரது கருத்து முக்கிய செய்தியாகவும், உங்களது கருத்து வெறும் கருத்துப் பதிவில்(கமெண்ட் பாக்ஸ்) இருப்பதில் இருந்து தெரியவில்லையா, அவர் உங்களைவிட சாதித்து இருக்கிறார் என்று.
தமிழர் நந்தா அவர்களே, சிவன் பார்ப்பனர் கடவுள் என்றால், அவரைப் பாடிய நால்வர்களும் பார்ப்பனர்களா? திருமூலர் கூட பார்ப்பனரோ?
அன்பின் வடிவம் கண்ணன் அவர்களே ! திருமூலர் தமிழ் சித்தரே ! அவர் அருளியது சிவம் (உயிர் ,ஆன்மா,பரமாத்மா ) சிவன் அல்ல ,உண்மையில் சைவ சித்தாந்தத்தில் உருவம் கிடையாது ! கண்ணப்பனார் கண்ணை நோண்டி சிவனுக்கு வைத்ததெல்லாம் ஹிந்து மதத்தின் கற்பனை கதைகளில் ஒன்று ! இப்படி பல கலவையால் சைவ சமயத்தை நாம் மறந்தோம் !
தமிழர் நந்தா அவர்களே, நால்வரை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே???
சமஸ்கிருதத்திற்கு இத்தனை விளக்கம் அளிக்கும் மங்கை அவர்களே.. நீங்கள் தமிழில் வழிபாடு செய்ததையும் அது பலன் அளிக்காதது பற்றியும் கூறியவை நகைப்புக்கு உரியவை. தமிழ்க் கடவுள் சரவணனின் சக்தி என்ன தெரியுமா உங்களுக்கு? எல்லா வினையும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கருள்வாய் என்ற வரிகளுக்கே வந்த விணையும் வருகின்ற வல்வினையும் கலங்கிப் போகும். சமஸ்கிருதத்தில் ஐம் க்லீம் சௌம் என்பன போன்ற பீஜ ஒலிகள் தமிழில் ஐய்யும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொலி சவ்வும் உயிரய்யும் கிலியும் என நேர்த்தியான பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளன. தினமும் கந்தர் கவசத்தை ஓதும் ஒருவரை உலகில் எந்த தீய சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. பலன் இல்லை என்று பிதற்றுவது வீண். இவற்றை எல்லாம் கடந்து சிவபுராணத்தில் மாணிக்கவாசகப் பெருமான் உறைக்கும் படியாக ஒன்றை கூறியுள்ளார். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர்.. (எங்கே?) சிவபுரத்தின் மேலாம்.. (எப்படி?)பல்லோரும் ஏத்தப் பணிந்து…! பொருள் தெரியாத மந்திரமும் பொருள் தெரியாத ஓ மஹா சீயா.. நாக்குமுக்கு நாக்கா..பாடலும் சமம் தான்… இன்றுமுதல் முத்தைத்தரு பத்தித்திருநகை.. அத்திக்கிறை சத்திச்சரவண.. முத்திக்கொரு வித்துக்குருபர என ஓதுங்கள்..
நேத்ரா உங்க சமய விளக்கத்தை உங்கள் தமிழ் பிள்ளைகளுக்கு சொல்லி தாருங்கள் . எங்களுக்கு வேண்டாம் . உங்கள் சமயம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்றால் எனக்கு சந்தோசமே . பொய் சொல்லி மலிவு விளம்பரம் தேட நான் அரசியல் வாதி அல்ல. கடவுளை நிந்திப்பது பாவம் . நான் கடவுளையும் சமயத்தையும் கலக்க விரும்ப விலை . சமக்ருதம் உங்களை போன்றவர்களுக்கு பொருள் தெரியாமல் போனாலும் பரவ இல்லை என் அனுபவத்தில் நடந்ததை தான் சொன்னேன் தவிர உங்கள் சமயத்தை பற்றி நான் குறைவாக சொல்லவில்லை . உங்களுக்கு உங்கள் சமயம் உயர்த்தி என்றால் நல்லது . வெளி நாடுகளில் பிராமணர்களில் வாழ்க்கை தரம் எப்படி உள்ளது என்பதற்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறன்
நேத்ரா உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றிகொள்ளுங்கள் .
தமிழ் தமிழ் என்று துதிபாடும் நேத்ரா அவர்களே உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றிகொள்ளுங்கள் .
உங்கள் பெயரே சமஸ்க்ருத்தில் தான் உள்ளது என்பதை தெளிவிர்ராக
SUAA
நன்றி சமஸ்கிருத மங்கை அவர்களே.. என் பெயர் என் பெற்றோர் சூட்டியது. மங்கை சமஸ்கிருதமோ.. மாற்றிக்கொள்வீர்களோ.. அதுவா இப்போது வாதம்? “உங்கள் தமிழ் பிள்ளைகளுக்கு சொல்லி தாருங்கள் . எங்களுக்கு வேண்டாம்” என்று கூறியுளீர்கள். நீங்கள் பிராமணர் என்றால் நல்லது.. நீங்கள் கருத்து சொல்ல உங்கள் “தேவ பஷா” எங்கே? ஏன் இந்த ” சூத்ர பஷா” வான தமிழ் உங்களுக்கு தேவை? நான் உங்கள் ஆரிய மொழியையோ பண்பாட்டையோ வசை பாடவில்லை. இந்து சங்கம் தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம், துளு, மலாய், ஆங்கிலம்,சீனம் இன்னும் பல மொழிகள் பேசும் மக்களின் ஒருங்கிணைக்கும் சமயம். அதனால்தான் அதன் சின்னம் கூட சமஸ்கிருத ஓம் என்பதும் எனக்கு தெரியும். சீன மொழியில் வணங்கினால் கூட கடவுளுக்கு விளங்கும். ஆனால் தமிழில் வழிபாடு பலன் அளிக்கவில்லை என்ற உங்கள் முரண்பட்ட கருத்துக்குத்தான் விளக்கம் அளித்தேன். வெளிநாடுகளில் உங்கள் பிராமணர்கள் வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்ற உங்கள் கூற்றை ஒப்புக் கொள்கிறேன். என்ன செய்வது மங்கை.. தமிழ் இனம் ஒரு சபிக்கப்பட்ட இனம் என்றே கருதத் தோன்றுகின்றது. யார் எவ்வளவு அடித்தாலும் வலிக்கவே இல்லை, ரொம்ப நல்லவர்கள் என்ற நிலை. நேற்று செருப்பால் அடித்தவன் இன்று ஆடு சமைத்து போட்டல் அவன் நல்லவன். சமயத்தை இழிவு செய்தவனுக்கு முத்தம் கொடுத்து வரவேற்பு..ஒற்றுமை இல்லை. நூறு சாதி. சாதிக்கு ஒரு கட்சி. கட்சிக்கு ஒரு கொள்கை. அதிக ஞாபக மறதி. தன் இனத்தானுக்கு எதிராக எகிரும் சூடு சுரணை அடுத்தவனைக் கண்டால் வாலை சுருட்டிக் கொள்கிறது. ஆர் டி எம் மில் கூட எங்கள் தமிழன் வந்தால் கோமாளியாகத் தான் காட்டப் படுகிறான். தலைவன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் எங்கள் மக்களை சுரண்டுகிறான். அரசாங்க நீதித்தலங்கள் எங்களுக்காக இல்லை.. துப்பாக்கிகளுக்கும் எங்களுக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டது..குண்டர்த்தனமும், கோயில், திரைப்படம் போன்றவற்றில் ஆபாசமும் எங்கள் பண்பாடு ஆகிவிட்டது.. இப்படி பல ஆதங்கம். இருப்பினும் உங்களை வாழ்த்தக் கடமை பட்டுள்ளேன். இந்து சமயத்தைத் தாண்டி வெளியே ஒரு தீர்வை நீங்கள் தேடவில்லை. மனதை புண்படுத்தும் எண்ணம் இல்லை. நன்றி
மங்கை அழகானத் தமிழில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.உங்கள் பெற்றோர்கள் சமஸ்கிரதமும் தமிழும் தெரிந்தவர்களாக இருக்கலாம்.இதெல்லாம் தவறு இல்லை. பிராமணர்கள் எத்தனையோ பேர் முருகனை வழி படுகிறார்கள். ஏன்? கிறிஸ்துவர்களாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த மொழி வாழ்வு கொடுக்கிறதோ அங்கு தாவி விடுவார்கள்! அவ்வளவு தான். நீங்கள் எந்த மொழியில் உங்கள் தெய்வத்தை வழிபட விரும்புகிறீர்களோ அப்படியே செய்யுங்கள். எல்லா மொழிகளும் தேவமொழிகள் தான்.இன்றைய நிலையில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்தத் தேவமொழியும் பயன்படாது! வெளி நாடுகளில் உள்ள பிராமணர்கள் தேவமொழியை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தவில்லை.அதிலும் பெரும்பாலோர் ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள் தான்.சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு! எந்த மொழி பயன்பாட்டில் உள்ளதோ அதைத் தேர்ந்து எடுப்பது இன்றைய நிலை!
நேத்ரா ,போதிவர்மரே . உங்கள் கருத்துகளை நீங்களே ஒருமுறை படித்து பார்க்கவும் . அப்போது புரியும் எங்கே தவறு உள்ளது என்று . இது என் பெற்றோர் வைத்த பெயர் இல்லை . என் உண்மை பேர் வைஷ்ணவி என் வயது 40 .நான் ஜோஹோர் வாசி என்னை இந்த பகுதிக்கு அறிமுகம் செய்து கொள்ளவே இந்த பெயர் . நான் மலேசியாவிலே பிறந்து வளர்த்தவள் என்றாலும் எனக்கு தமிழை போலவே தெலுகு ,மலையாளம் வகுப்புக்களுக்கு சென்று எழுத படிக்க கற்று கொண்டேன் . மற்ற மொழிகளும் தமிழை போல இனிமையான மொழியே என்பது என் கருத்து இதை நான் பெருமையாக சொல்லிகொள்ளவில்லை காரணம் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட எனக்கு விருப்பம் இல்லை . உங்களை போன்றவர்களையும் அப்படி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கே என்ற ஆதங்கம் அவளவு தான் .இன்றைய தேதியில் சிறையில் வாடும் இனம் எது என்று கேட்டல் இந்தியர் என்று சொல்வார்கள் அனால் அதில் மலையாளிகளோ இல்லை தெலுங்கர்களோ குறைவு தான் . தயவு செய்து உஜிலாதேவி வலை பக்கத்தை வளம் வாருங்கள் உங்கள் குழப்பம் தெளியும் . தமிழ் மதம் என்று ஒன்று கிடையாது . அது இருக்கு இப்போ இல்லை என்பதும் வேடிக்கையாகவும் இருக்கு . சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஆட்சி செய்ய முடியாது என்பது சத்யம் .
தமிழர்களுக்கு சமய தெளிவு இருந்தால் என்ன சோதனை வந்தாலும் மதம் மாறும் எண்ணம் வராது , அது இல்லாததால் தான் இங்கே அடுத்தவர் மதத்தை கொண்டாடுகின்றனர் . அதை பார்க்கும் பொது வேதனையாக இருக்கு . அதை தடுக்க முயற்சி செய்தால் வரும் தலை முறைக்கு நல்லது . கோவில் பூஜைகளுக்கு வரும் சிறுவர்கள் சமய உடை அணிவது கூட குறைவு தான் . தைபூசத்தில் முருகனுக்கு காவடி எடுத்தால் போதும் . அதை விடுத்தது புராணத்தில் சொல்லாத காவடி எல்லாம் எடுப்பது ஏன் .? பிராமணர்கள் எவ்வளவு உயர்த்த இடத்தில இருந்தாலும் கடவுளை சேவிக்காமல் இருக்க மாட்டார்கள் . (தமிழ் படங்களில் காட்டுவது போல சொந்த கடவுளை நிந்திப்பதும் கிடையாது ) உங்களுக்கு உபன்யாசம் செய்வது உங்களை சிறுமை படுத்துவதற்கு சமம் என்று நினைக்கிறன் . அதனால் இத்துடன் முடிக்கிறேன் . வாழ்க ஹிந்து மதம் .
mangai hindu matha asinggangkalai naangal veli konarnthaal unggalaal thaanggi kolla mudiyaathu!
(மங்கை) வைஷ்ணவி அவர்களே.. காவடியைப்பற்றி புராணத்தில் இருக்காது.. அது ஆரிய பண்பாடுகளை மட்டும் சொல்லக்கூடிய நூல்.. தமிழர்களுக்கு சமய தெளிவு குறைவு என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்..
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
என தொல்காப்பியம் கூறும் நாநிலங்களுக்கும் உரிய தெய்வங்களும் நிலை திரிந்த பாலை நிலத்திற்கு கொற்றவை என்ற தெய்வத்தையும் மட்டுமே வணங்கும் மக்கள் தமிழர்கள்.
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (தொல்காப்பியம்)
இவை உலகின் முக்கியக் கூறுகள் என 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் பண்பாடகி இருந்தது. ஆரிய பண்பாடு கலப்புக்குப் பிறகு தான் அவை பஞ்ச பூதமாகவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களோடு ஆரிய மொழியும் வந்தது. பிறருக்கு சொல்லிக் கொடுப்பது ஒன்று. ஆரியர் ஒழுகுவது வேரொன்று. கேட்டால் வேத ரகசியம். வருணாசரமம் என்ற சாதி பிரிவிணைகள் மலிந்தன. கோவிலுக்கு உள்ளே ஒரு சாதி, வெளியே ஒரு சாதி.. தீண்டத் தகாத தமிழன் அறிவிழந்தான். சொல்லவே கூசும் ஆரிய பண்பாட்டை வேத முடிவு என்று ஏற்றுக் கொண்டு கூர்மழுங்கிப் போனது தமிழ் இனம். தமிழ்ச் சுவடிகள் பதினெட்டாம் பெருக்குக்கும் போகி நெருப்புக்கும் இரையாகின.. தமிழருக்கு சமய தெளிவு போயே போனது.. உண்மைதான். நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி.
இறைவனை இறைவன் என்றே வழிபடுவோம். மனிதனையும் அவர்களுக்குள்ளே இருக்கும் வெவ்வேறு திறமைகள், ஏற்ற தாழ்வுகள், வேருபடுகளுடநேயும் (மொழிகள் உட்பட) உருவாக்கியவர் இறைவனே என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறைவன் தன்னை தன் படைப்பு ஒவ்வொன்றுக்கும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆக நாம் ஒவ்வொருவரும் அந்த பரம்பொருலானவரை அவரவர் அறிந்த வகையில் வழிபடுகிறோம். ஒவ்வொருவரும் தனது வழிப்பாட்டு முறையே சரியானது அல்லது மேன்பட்டது என்று வாதிடும் அல்லது நிரூபிக்க முயலும்போதுதான் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாகி பல வேளைகளில், நம்மை படைத்த இறைவனின் விருப்பத்திற்கு எதிரான செயல்களான கருத்து வேறுபாடு, சண்டை, முற்றி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளபடுகிறோம். இதனை கண்டு படைத்தவர் கலங்குகின்றார். படைக்கப்பட்ட நாம் படைத்தவரின் இயல்பை கொண்டு வாழ்வோம். நம்மைப்போல் அனைவரையும் வாழவைப்போம். இறைவன் நம் எல்லோருக்கும் தம் அச்சீரை வழங்குவாராக.
மலேசியா இந்திய வம்சாவளிகளை ஒற்றுமை படுத்த தமிழ் மொழியாலும் தமிழ் பள்ளிகளாலும் மட்டுமே முடியும் …இந்து சமயத்தை முன்னிறுத்தி அரசியல் மட்டும் தான் பண்ண முடியும்…இதை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக இந்தியர்களை பயன்படுத்தி கொல்லுகிறார்கள்…1980’களில் அன்றைய ம இ கா தலைவர் ச.சாமிவேலு ஏற்படுத்திய தமிழ் கல்வி மற்றும் தமிழ் பள்ளி புரச்சியை மறுபடியும் ஏற்படுத்த வேணும்…அரசியல் நோக்கமில்லாமல்…!
இந்தாப்பா! எந்த சாமியைக் கும்பிட்டாலும், எந்த மொழியில் கும்பிட்டாலும் நல்லது செய்தால் தான் நல்லது நடக்கும். மோட்சமும் கிடைக்கும். தேவ பாஷை, தேவ மொழி எல்லாம் சந்தோஷம் கொடுக்குமே தவிர மோட்சத்தைக் கொடுக்காது! அப்படியெல்லாம் கொடுக்கும் என்றால் அரசியல்வாதிகள் எல்லாம் .தேவ பாஷைகளைக் கசடற கற்க ஆரம்பித்துவிடுவார்கள்!
கோயிலுக்கு போனோமா… சாமி கும்பிட்டோமா… அர்ச்சனை பண்ணோமா… பிரசாதம் சாப்பிட்டோமனு தான் பலர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் அடிப்படை சமய அறிவே இல்லை… வளரும் சந்ததியினருக்காவது சரியான சமய கல்வி கிடைக்க இந்து சங்கம் முனைவது மிக அவசியம். கோயில் என்பது வெறும் பூஜை புனஷ்காரங்கள் மட்டும் செய்யும் இடமாக இல்லாமல் மனிதம் வளர்க்கும் இடமாகவும் இருக்க வேண்டும். கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா…
I went to temple today and found a big crowd. They said varalakshmi pooja. The situation at the temple supposed to better than normal prayer days but Me and my friends cant concentrate on prayers because of the girl in front of us. They were damn sexier in saaries. Showing their back full visible without the jacket. Its better if they come topless next time.Do other religions accepts this kind of low class devotees? What action does the temples nor Hindu sangam took to control these nonsense. If these girls goes to temples in Bali, very sure they will kicked out of the temple.
சகோதரர் இந்திரசித் சொல்வது முற்றிலும் உண்மை .. கோயிலுக்கு வருபவரின் ஆடை அணியும் முறையில் கண்டிப்பாக ஒரு வரைமுறையை கோயில் நிர்வாகம் விதிக்க வேண்டும்.. அளவுக்கு மீறி வளைந்து கொடுப்பதால் தான் நமது மதத்தை எவனும் மதிப்பதில்லை .. காசுக்காக வேற்று மத அரசியல் வாதிகளுக்கு கோயில் வளாகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.. என்ன மாதிரியான கொள்கைவாதிகள் நீங்கள்.. மற்ற மதத்தினரை பார்த்தாவது திருந்துங்க …
இந்து சங்கம் கவனத்திற்கு,
ஆலயம் செல்பவர்கள் கண்டிப்பாக பாரம்பரிய உடைகளை உடுத்த விதிமுறைகள் விதிக்க வேண்டும். ஆலய நிர்வாகம் கண்டிப்புடன் இருக்க இந்து சங்கம் உறுதுணை வேண்டும்….!
தமிழர்களை ஒன்றிணைக்க எவராலும் இயலாது, நம் கட்சிகள் பல, இதில் எங்கே ஒற்றுமை காண்பது?
எதில் வேறு பட்டாலும், தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்று கூட தயங்க கூடாது. இது நிலைத்தல் தமிழன் என்றல் ஒரு பயமும் மதிப்பும் கூடும். நம்மை நாம் தன் உயர்த்திகொள்ள வேண்டும்.
தமிழால் ஒன்று படுவோம், தமிழினத்தை உயர்த்துவோம், நன்றி.
Thank you Puvana and sukran.
நேத்ரா நான் பால் காவடி பற்றி சொல்லவில்லை. இரண்டு வருடத்திற்கு முன்பு பத்துமலையில் ஒருவர் காஸ்பெர்க்(பீர்) காவடி எடுத்தாரே அதை பற்றி சொன்னேன் .
அன்பின் வடிவம் கண்ணன் அவர்களே! இதோ சிறு விளக்கம்! சிவன் என்னும் உருவ வழிபாடு சைவ சமயத்தில் கிடையாது, சிவம் (அரூபம் ) அல்லது ஜோதி வழிபாடுதான் சைவ சமய மார்க்கம்! நீங்கள் கேட்ட நால்வரில், ஒருவர் சிவனையும், மற்ற மூவரும் சிவத்தையும் வணங்கினார்கள் அல்லது பாடினார்கள், சிவனை வணங்கியவர் ‘தமிழர் அல்ல’ என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்! மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இதில் யார் தமிழர் அல்ல என்பதை அறியும் ஞானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்!
😉 தமிழர் நந்தா அவ்வர்களே, ஆகவே திருமூலர் சிவனையோ இல்லை அவர் உருவத்தையோ பாடவில்லை என்கிறீர்கள்! அந்த நால்வரில் சிவனை பாடிய ஒருவர் மட்டும் ஆரியர், மற்ற மூவர் தமிழர் என்கிறீர். இதுதான் தங்களது கருத்தா?
சிவனுக்கும் ,சிவத்துக்கும் வேற்றுமை புரிந்து நீங்கள் விளங்கி கொண்டால் ,அதுதான் என் கருத்து ! சரி இல்லை என்றால் என் கருத்தை முறி அடியுங்கள் ! தென்னாடுடைய சிவமே போற்றி !
தமிழன் இந்துவா? இந்து தமிழனா ?
தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்….
நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்….
நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்… நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்…
நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்…….
தமிழன் இந்து அல்ல…. தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே… இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது …. பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் கூடிய அறிவியல் வாழ்வியலை, கடவுளுடன் கலந்து சொன்னால் பல்லாயிரம் ஆண்டுகாலம் நீடிக்கும் என்பது என் முப்பாட்டனின் கணிப்பு….
நாங்கள் என்றுமே பகவத் கீதையைப் படித்ததில்லை…. எங்களுக்கு என்று மதத்தலைவன் என்றுமே இருந்ததில்லை. கட்டுப்பாடுகள் எமக்கு இல்லை…. எம் முப்பாட்டன் முருகனும், பெண்கடவுள் அம்மனும், எல்லைச்சாமி அய்யனாருமே என் கடவுள்….எம் குடிகாக்க உயிர் கொடுத்த மறவர்களே எம் குலதெய்வங்கள்…. நடுகல்லும்,வாளும் வேல்கம்புமே எம் குறியீடுகள்…. திருநீர், துளசி,சந்தானம் குங்குமம் . வெத்திலை, பாக்கு, தேங்காய் , பூசணிக்காய், பூசணி பூ, என அனைத்தும் எம் உடலையும், மனதையும் போற்றி பாதுகாக்கும் அணிகலன்கள்……
இதிலிருந்து தமிழர்களுக்கு மதம் ஒன்று கிடையாது என்று தெரியவில்லை … ஹிந்துக்களுக்கு மதம் உள்ளது . பெரியார் போன்றே தமிழர்கள் நாத்திகவாதிகள் என்றே என்ன தோன்றுகிறது ( இது என் தமிழா நண்பர் எனக்கு அனுப்பியது . உங்களோடு பகிர்கிறேன் . ( நான் தமிழர் இல்லை )
இப்படி மத நம்பிக்கை இல்லாதவர்களை யார் எப்படி வேண்டும் என்றாலும் மடக்கலாம் . சமய தெளிவு இல்லை என்றால் அவர் அவர் பெரியார் தாசனாக இருந்தாலும் அப்துல்லாவகா வாய்ப்பு உள்ளது
“தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே”. உண்மைதான் மங்கை.
சைவ சித்தாந்தம் அறியாமல் தமிழர் நந்தா கருத்து எழுதுவது தவறு. இறைவன் உயிர்களுக்காக உடல்களையும் உலகங்களையும் படைக்க, மாயையிலிருந்து 36 தத்துவங்களை தோற்றுவித்தார். அவை முறையே (1) சிவ தத்துவம் (2) வித்தியா தத்துவம் (3) ஆன்ம தத்துவம் எனப்படும்.
“சிவ” தத்துவம் 5 படி முறைகளைக் கொண்டது. (i) சிவம் (ii) சத்தி (iii) சாதாக்கியம் (iv) ஈசுவரம் (v) சுத்தவித்தை என்பன. சிவ தத்துவத்திற்கு தலைவன் சிவன் எனப்படுவார். சத்தி தத்துவத்திற்கு தலைவன் சிவனின் திருவருளாகிய சத்தியேயாகும். இவ்விருவர்களின் நிலை அருவம். அடுத்து சாதாக்கிய தத்துவத்திற்கு தலைவன் சதாசிவன். இவரின் நிலை அருவுருவம் (லிங்கம்). ஈசுவர தத்துவத்திற்கு தலைவன் மகேஸ்வரன், சுத்தவித்தை தத்துவத்திற்கு தலைவன் உருத்திரன். இவ்விருவரின் நிலை உருவ நிலை. ஆகவே “சிவம்” என்பது சைவ சமய நெறியில் “நுண்ணிய நிலையை” குறிக்கும். “சிவன்” என்பது அத்தத்துவத்திர்க்கு தலைவனாக இருப்பவரை குறிக்கும். நந்தா கூறவது போல் சிவன் ஆரியரின் கண்டுபிடுப்பு அல்ல. மாறாக சைவ சமயத்தில் “பரம்பொருளாக” விளங்குபவரே. வேதத்தில் குறிக்கப்படும் “உருத்திரன்” சுத்தவிதையின் தலைவனாகும் என்கிறது சைவ சித்தாந்தம். “சிவன்” என்னும் பரம்பொருள் அதற்கும் மேலானவன் என்கிறது சைவ சமயம். சைவ சமயத்தை அறிக.
மங்கை, கண்ணன் நீங்கள் தமிழர்களுக்கு என்று இருந்த, இருக்கின்ற சைவ சமயத்தை அறியாமல் அதன் சித்தாந்தத்தை அறியாமல், மெய்கண்ட சாத்திரங்களைப் படிக்காமல் திருமுறையில் அடங்கி இருக்கும் சைவ சமய நெறிகளை அறியாமல் எப்படி தமிழர்களுக்கு சமயம் இல்லை என்று வாதிடுகிண்றீகள்? தமிழரின் சமயமே சைவ சமயம். நால்வர் பெருமக்களால் வளர்க்கப் பட்ட சமயம் சைவ சமயமே. வைஷ்ணவி எல்லா மொழிகளையும், வேதத்தையும் கற்றுக் கொண்ட நீங்கள் சைவ சித்தாந்தையும் முறையான ஒரு ஆசிரியரின் வழி கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அறிவு மிகும்.
சைவ சமய சித்தாந்தை அறிய விரும்புவோர் முனைவர் திரு ஆறு. நாகப்பன் எழுதிய ‘சித்தாந்த சைவம்” என்னும் நூலை (தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது) வாங்கிப் படிக்கலாம். அவர் நடத்தும் சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு சென்று பயிலலாம். (தொடர்புக்கு: 016-9691090) ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். வீணே தவறான கருத்துக்களை எழுதி தமிழரின் மனதை மென்மேலும் புண் படுத்த வேண்டாம்.
மங்கை அவர்களே நீங்கள் தமிழர் இல்லையென்றால் ஏன் உங்கள் நேரத்தை இங்கு வீண்ணடிகிரிர் ! எங்கள் இனிய தமிழ் மொழி இல்லாமல் உங்களால் வாழ முடியாதா ?
தமிழர் நந்தா அவர்களே! இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்:
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத்தானே.