சமீபத்தில் ‘சுவடுகள்’ என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. ஜெய்பாலா என்பவர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மோனிகா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு இன்னும் என்னென்ன வேலைகள் மிச்சமிருக்குமோ, அத்தனையும் இந்த ஒருவரே பார்க்க, படத்தின் மிச்ச சொச்ச வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
விழா முடிந்து நிருபர்களின் கேள்வி நேரம் ஆரம்பித்தது. அங்குதான் வந்தது வினையே! ஒரு மூத்த நிருபர், ‘இந்த படத்தின் ஹீரோவே நீங்கதான்னு சொல்றீங்க. ஆனால் உங்களுக்கு வழுக்கையெல்லாம் விழுந்து ஐம்பது வயசு ஆகியிருக்கும் போலிருக்கே’ என்றார் அசால்ட்டாக. பக்கத்திலிருந்த ஜெய் பாலாவின் மனைவிக்கு பொசுக்கென கோபம்
வந்துவிட்டது. (பின்னே வராதா?) ஏங்க, ரஜினிக்கும்தான் வழுக்கை விழுந்திருக்கு. பேத்தி வயசுள்ள பொண்ணுங்களோட டூயட் பாடி ஆடுறாரு. அதையெல்லாம் பொருத்துக்கிறீங்க. இதை பொருத்துக்க மாட்டீங்களா என்று கோபப்பட, அதோடு விட்டாரா நிருபர். ‘அப்ப இவரும் ரஜினியும் ஒண்ணா?’ என்று கட்டிங் பிளேயரை திருப்ப, ஆத்திரத்தில் பொங்க ஆரம்பித்தார் திருமதி ஜெய்பாலா.
‘ரஜினின்னா பெரிய இவரா? எங்களை மாதிரி இருக்கிற ஈழ தமிழர்களுக்கு என்ன செஞ்சாரு? அவரு சம்பாதிச்சு அவரோட குடும்பத்துல உங்களவங்களை வாழ வச்சாரு. நாட்டுக்கு என்ன செஞ்சாருன்னு சொல்லுங்க பார்ப்போம்’ என்று எகிற, நிருபர் கப்சிப்!
இந்த ஆளு கன்னடக்காரனுக்கு செய்வான்… தமிழ் நாட்டுலே மண்டபத்த கட்டி வாடகைக்கு விட்டு தமிழனிடம் லாச்ச லச்சமா வாடகை வாங்கி சம்பாதிப்பான்…! இதுதான் ரஜினி தமிழனுக்குச் செய்தது…!
நிருபருக்கு வந்த வேலை முடிந்தது என்று கிளம்பி இருப்பார் !
என்ன ஆச்சு ! ரஜினி தமிழ் நாட்டுக்கு வந்தார்.நடித்தார்.பணம் சம்பாதித்தார்.தமிழர்கள் அவரை தலையில் தூக்கி ஆடினார்.அவர் எப்படி ஈழமக்களுக்கு போராடுவார்.ஓ! அவர் கன்னடத்து இனம்.பிறகு எப்படி அவர் ………… ஆஹா !ஆஹா !ஆஹா !ஆஹா !.
ரஜினி ஒரு நடிகர். அவ்வளவு தான்! அவரை ஏதோ பெரிய தலைவரைப் போல நினைத்து கேள்வி கேட்கிறீர்கள்! அரசியல் தலைவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். அவனவன் தனது குடும்பத்திற்குத் தான் சம்பாதிக்கிறான். ஏன் உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெளி நாடுகளில் நீங்கள் பெரும்பாலும் சீரும் சிறப்புமாக வாழ்கிறீர்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள உங்கள் வீடுகள் யாரும் இல்லாத அனாதைகளாக ஆண்டுக் கணக்கில் பாழடைந்துக் கிடக்கின்றன! ஒரு ஏழை அங்கு தங்குவதற்கு நீங்கள் அனுமதிப்பதில்லை. ஏன்? உங்களைப் போலத் தான் மற்றவர்களும் இருப்பார்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கே நீங்கள் உதவவில்லை. அப்புறம் என்ன நாட்டுக்கு?
ரஜினி இங்கை மக்களுக்கு நிதி உதவி ருபாய் ஒரு கோடி செய்து இருக்கிறாரர், நடிகர் சங்கம் நடத்திய தமிழ் ஈழம் மக்களுக்காக போராட்டம் நடுத்தும் பொது 2010தில், அவர் சொந்த திறமையை கொண்டு உழைப்பையும் கொண்டு சம்பாரித்த பணத்தை தானம் செய்ய அவசியம் இல்லை தமிழனாகிய கமலஹாசனே ஒண்ணுமே செய்யவில்லையே, சிங்கப்பூரில் பொழப்பு தேடி போயி சம்பாதிக்கிறவன் சிங்கபூரு மக்களுக்கா தானம் செய்யுறான்? பணத்தை மலேசியாவுக்குத்தானே கொண்டு வறான் !
தமிழர்கள் என்றைக்கு இனவெறியை கைவிடுகிறார்களோ ,அன்றுதான் தமிழன் உருப்பிடுவான் ,மலேசியாவில் நம்மளை ஒதுக்கிதானே வச்சிருக்கான் ,அப்ப கூட நமக்கு புத்தி வரவில்லை பாருங்கள் !
உனக்கு திறமை இருந்தால் நீயும் கோடிஸ்வரனாக ஆகலாம் .திறமை இல்லாவிட்டால் நடுத்தர வாழ்க்கைதான் வாழ முடியும் ,பிறர் முன்னேற்றத்தை கண்டு பெருமை படு ,,பிறரின் முன்னேற்றத்தை தூற்றாதே ,அது தமிழன் பண்பு கிடையாது .
மோகன் ! யார் இனவெறியன் என்று தெரியாமல் உளறிவிட்டார் ! சொந்த உழைப்பில் தானம் கொடுத்தால்தானே அது தானம்! கோளாறு பிடித்தவர் மீண்டும் உளறினார் ! கமலஹாசன் தமிழனாம் ! அவன் பிராமணன் என்று தெரியாமல் மறுபடியும் உளறினார் ! மலேசியாவில் நம்மை ஒதுக்கி வச்சிருக்கானாம் அருமையான பிதற்றல் !யார் சினிமா காரனா ? அட வெண்ண ரஜினி, தமிழன் பிள்ளைகளை பெற்றுபோட! தமிழ் நாட்டில் இலவச கல்யாணம் செய்து வைப்பான், திருமண மண்டபம் கட்டுவான்! தமிழன் திரைப்படம் பார்த்தே கெடனும் என்று ! ஆனால் தொழில் பேட்டையை கர்நாடகத்தில் கட்டி கன்னடகாரனுக்கு வேலை கொடுப்பான் ! பிறரை தூற்றாதே என்று அறிவுரை வேறு, அது தமிழன் பண்பாடு இல்லையாம்!
ரொம்ப பேருக்கு, ரஜினிகாந்த அவர்கள் இலங்கை மக்களுக்கு செய்த உதவியை யாருக்கும் தெரியாது இது மறைக்க பட்ட உண்மை ,ஆனால் கலைஞர் கருணாதியை தமிழ் என்று தலையிலே தூக்கி வச்சி ஆடுவாங்க தமிழர்கள் ,உண்மையிலேயே கருணாநிதி ஒரு தெலுங்கர் ,தமிழர்களை இலங்கையில் கொள்ளும் பொது வேடிக்கை வேடிக்கை பார்த்தவர் !ரஜினி இலங்கைக்கு செய்த உதவியை இந்த YOUTUBE பில் பாருங்கள் ,COPY பண்ணி YOUTUBE பில் PASTE பண்ணுங்க ,,http://www.youtube.com/watch?v=qQvQqL7eWFM
தமிழர் நந்தா, மலேசியாவை கவனிக்கவம்… எவன் எப்படி போனால் நமக்கு தேவை இல்லை, நாம் பேச வேண்டிய கருப்பொருள் ரஜினி இல்லை, தமிழனுக்கு தமிழன் குழி பறிக்கிறான் அதை கவனிக்கவும், தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்த பொது கருணாதி வேடிக்கை பார்த்தானே! அவரை பற்றி உன்னால் ஏன் வாயை திறக்க முடியவில்லை???
மோகன் ! கலைஞர் கருணாநிதியைப்(அவர் தமிழர் இல்லை என்பதையும் சேர்த்து) பற்றி எழுதி ஒய்ந்துவிட்டேன், கவனிக்க வில்லையா? தமிழர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதுபவர்களுக்கு சாட்டையடியாய் நான் பதில் கொடுப்பேன்!
தமிழர் நந்தா.. “”எங்களை மாதிரி இருக்கிற ஈழ தமிழர்களுக்கு என்ன செஞ்சாரு?”” என்ற வரிகளை கவனியுங்கள்.. இங்கே உள்ள யாழ்ப்பாணத்தவர் இங்கே உள்ள தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்..?? தங்களை தமிழர்கள் என்று கூட சொல்லிக் கொள்வதில்லை.. உதைப்படும் வரை ஈழத்தமிழனும் அப்படித்தான் சொன்னான்.. தமிழர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதுபவர்களுக்கு சாட்டையடியாய் பதில் கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.. அனால் தன்னை தமிழனே அல்ல என காட்டிக்கொள்ளும் இனத்திற்கு எதற்கு ஆதரவும் அரவணைப்பும்.. தான் ஒரு தமிழன் என நெஞ்சு நிமிர்த்தி சொல்லும் கமலஹாசன் எவ்வளவோ மேல் நண்பரே.. எல்லாம் பாரிக்கும் வல்வில் ஒரிக்கும் உள்ள வேறுபாடுதான்..
அன்புக்கினிய நேத்ரா அவர்களே ! மலேசியாவில் வாழும் யாழ்ப்பான தமிழனின் நிலையை நான் அறிவேன் ! பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட யாழ்ப்பான தமிழன், தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழனை முன்னேறவிடாமல் தடுத்து , தோட்ட தொழிலுக்கு தென் இந்தியர்களின் குழந்தைகளை 6ஆம் ஆண்டு வகுப்போடு நிறுத்தி, வெள்ளைக்காரனோடு சேர்ந்து பல கொடுமைகளை செய்தான் இது உண்மையே! ரயில்வே துறையில் அவன் செய்யாத அட்டகாசமா? அவர்களுக்கு ஆங்கில அறிவு இருந்ததால் வெள்ளையன் அவர்களை பதவியில் நிறுத்தினான், அவனோ நமக்கு துரோகம் இழைத்தான்! கூலிக்கு இலங்கையில் இருந்து யாரும் வரவில்லை! ஆனால் இலங்கை போரில் இறந்தது நம்மை போன்ற வர்க்கமே! அவர்களை இங்கே இருக்கும் யாழ்ப்பான இன துரோகிகளோடு ஒப்பிடாதீர்கள் அருமை உறவே! இலங்கை பயணத்தின் போது, இந்த சங்கதியை மலேசியா நண்பன் ஆசிரியர் ஒருவர் மேதகு பிரபாகரனிடம் வினவினார்! செம்பருத்தி ஆசிரியர் என் கருத்தை முழுமையாக ஆதரிப்பார் என்று நம்புகிறேன்!
தவற்றை சுட்டிக்காட்டிய தங்களின் பதிவிற்கு நன்றி. உங்கள் இன உணர்வுக்கு தலை வணங்குகின்றேன்.
தமிழன் தானும் நல்லா வாழ மாட்டான் ,பிறர் நான்றாக வாழ்வதையும் பார்த்து பெருமை பட மாட்டான்… ஒருத்தனுக்கு ஒருத்தன் குறை சொல்லிக்கொண்டு இப்படியே வாழ்க்கையை நண்டு மாதிரி ஓட்டிவிடுவார்கள்
நேத்ரா மற்றும் தமிழர் நந்தா.. நீங்கள் இருவரும் சொன்னது நூறு விழுக்காடு உண்மை . நானும் மலேசியாவில் பலவருடங்களாக இருக்கிறேன் … இந்த சிலோன் டமிழன் பேசுவது தங்க்லீஷ் .. இந்தியனுக்கு பொண்ணு கொடுப்பாங்க. ஆனா இந்திய பொண்ணுக்கு ஆணை கட்டிகொடுக்க மாட்டாங்க .. எதனால்??? பணம் தான்… ஐயா வன்னியில் இறந்தது பெரும்பாலான இந்திய வம்சாவளி மலையகத்து தமிழ் மக்கள். ஜூலை(1983) கலவரத்தின்போது உயிர்தப்பி வந்து குடியேறியவர்களும் விவசாய கூலியாக வந்தவர்களும்… இன்று ஐயா நந்தா சொன்ன செய்திக்கு ஆதாரம் http://newjaffna.com/fullview.php?id=MjM2ODE=
நான் வரவேற்கிறேன், கமலஹாசன்(தமிழ் நாட்டு பார்ப்பனன்)1980களில் வீட்டிலேயே இருந்துக்கிட்டு நான் வீட்டில் இல்லை என்று தன் ரசிகர்களுக்கு சொல்லிவிடுவாராம், ஆனால் ரஜினி (கர்னாடக மாராட்டியன்) வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தன் ரசிகர்களை சந்தித்து நலம் விசாரிப்பாராம்…
ராஜபக்சா கொன்றானே தமிழனை ,இத பற்றி எவனாவது பேசி கருத்து எழுதுகிறார்களா , இதுதான் தமிழனின் இன வெறி ! இன்னும் இந்த உலகில் தமிழர்கள் 300 வருசம்தான் வாழ்வார்கள்! அதற்க்கு பிறகு தமிழ் இனமே இந்த உலகில் தென்பட மாட்டார்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், கேப்டன் பிராபாகரனுக்கு ரகசியமா பணம் மற்றும் ஆயுத உதவி செய்து இருக்கிறாரே, இத பற்றி யாரும்ம் பேச மாட்டேங்க்களா? நானும் சுத்த நண்டு தமிழன்தான் !
இன உணர்வுக்கு தலை வணங்கும் நேத்ரா விற்கு எனது பாராட்டுக்கள். தவறை உணர்ந்து செயல்படுவது ஒரு உயரிய குணம் .
நன்றி ‘நேத்ரா’ மற்றும் ‘வெள்ளியூர் முருகன்’ உடன் பிறப்புக்களே ! பழைய சம்பவங்கள் படிப்பினையாக நினைத்து புதிய சிந்தனைக்கு திரும்புவோம்! இன்னும் நண்டுக்கதை வண்டுக்கதை சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் !
ரஜினி ஒரு கன்னடக்காரன். தமிழனுக்கு தண்ணி கொடுக்காத கர்நாடகக்காரனை தட்டிக் கேட்காத ரஜினியா இலங்கை தமிழனுக்குப் பாடுபடப்போகிறான்? சூடு சொரணை இல்லாத தமிழன்தான் இவனுங்க படத்துக்கு மாலை போட்டு மரியாதை செஞ்சுகிட்டு இருப்பானுங்க.
இப்படியே ஜே போட்டு தமிழன் நாசமா போன கதையும் உண்டு ,போயி பொலப்ப பாருங்கையா
தமிழர் நந்தா, சரியாகச் சொன்னீர்கள். ஒரு காலக் கட்டத்தில் அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லவே வெட்கப்பட்டவர்கள். கூலிக்காரத் தமிழனோடு ஒப்பிடுவதை அவர்கள் விரும்பவில்லை. தங்களை “சிலோனீஸ்” என்று கூறுவதையே விரும்பினர். யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அடிக்குப் பிறகு தான் தங்களைத் தமிழன் என்று சொல்ல ஆரம்பித்தனர். ஒரு காலக்கட்டத்தில் அவர்களால் நடத்தப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளியில் இருந்த தமிழை அழித்துவிட்டு இப்போது அதே பெயரில் ஆங்கிலத்தில் மண்டபமாகி விட்டது. அவர்கள் இன்னும் தமிழர்கள் என்னும் அடையாளத்தை விரும்பவில்லை என்பதற்கு இது ஒன்றே போதும். என்ன செய்வது? தமிழன் ஆயிற்றே!
மலேசிய தமிழனுக்கு வேற வேலையே இல்லையா? இந்தியாவில் உள்ள கன்ணடக்காரனைப் பற்றி பேசுறீங்க. இங்க உங்க நாட்டில, உங்க உரிமையிலே எருமை மேயுதே எவரும் கேட்கமாட்டிங்கலா? தமிழனுக்கு பள்ளிக்கு, கோவிலுக்குனு நல்லா உதவி செஞ்ச சேவியருன்ற தமிழனுக்கு கல்தா கொடுத்துடீங்க, இந்நாட்டு இந்தியர்களில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே உள்ள அந்த இனத்துக் காரனுக்கு எக்ஸ்கோ கொடுத்துட்டீங்க, அந்த இனத்துக் காரனுக்காக தமிழன் எல்லாம் சுல்தான் கிட்ட பெட்டிசன் கொடுக்குறான். ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆகப் போகுது ஒன்னித்தியும் கானோம்? தினக்குரல் ஆசிரியர் ராஜன் தமிழர் திருநாள் வாழ்த்து அனுப்பினால், நான் தமிழன் இல்லேன்னு அந்த இனத்து நபர் பதில் அனுப்பியிருக்கார். தாமான் பெர்மாத்தா போய் ஒரு மாசத்தில் வூடு கட்ட நிலத்த கொடுக்கிறன்னார் ஒன்னுத்தியும் கானோம். இங்கயே நாறுது நம்ம பொலப்பு, நீங்க எல்லாம் ஊரை பத்திப் பேசறீங்கலா? தமிழன் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கிட்டான்!
தமிழன் திருந்தவே மாட்டான்!
.ரஜினி அவன் ஒரு நடிகன்
.கன்னட மாநிலத்தில் ஒரு தமிழன் பேர் போட முடியுமா?..தமிழன் இனப்பற்று இலாதவன்.
எம் ஜி ஆர், ரஜினியை தலையில் தூக்கிக்கிட்டு ஆடுறான். ஆனால் சிறந்த நாயகன் சிவாஜி, கமல், அவர்கள் நிலை என்ன? தமிழ் படத்தில் மற்றவன் நடிக்கிறான், நம் இனத்தவன் எங்கே?
தமிழனை நம்பவே முடியாது, மற்றவனை தூக்கி விடுவானுங்க, நம்மவனை கவுத்தும் விடுவானுங்க!
தமிழர்கள் என்றைக்கி ஒற்றுமையா இருந்து இருக்காங்க ?
BOTHIVARMAR அவர்களே நல்லா நாக்க புடுங்கிற மாதிரி கேளுங்க சார் .
போயி பொலப்ப பாருங்கையா…..யு ஆர் ரைட் மோகன்.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ரஜினி செஞ்சது சரிதான், பஸ்ல டிக்கட் கிழிச்ச மனுஷன் இப்ப பெரிய ஆள். முடிஞ்சா நீங்களும் நல்லா உழைச்சி சம்பாரிச்சி மத்தவங்களுக்கு அள்ளி2 கொடுங்க. ஆனா எனக்கு ரஜினியை பிடிக்காது.
ரஜினி நல்ல ஸ்டைல் நடிகர், தன் திறமையால் வளர்ந்தவரு, கர்னாடகக்காரன் தண்ணி கொடுக்கவில்லைன்னா போயி அந்த நாட்டு அரசியல் வாதியை கேளுங்கப்பா, தன் வீட்டுக்கு பொழப்பு தேடி வந்த ஒரு நடிகனை கேட்டால் அவரால் என்னையா செய்ய முடியும், தமிழன் கிள்ளியும் விட்டுக்குவான், தொட்டிலை ஆட்டியும் விட்டுக்குவான்!
வெளிநாட்டில் போயி சம்பாரித்து உங்க குடும்பத்தைதானே காப்பாற்றுறேங்க, வெளிநாட்டிலே பணம் சம்பாரித்து வெளிநாட்டுக்காரனுக்கா கொடுக்குறேங்க, மலேசியாவில் பங்களாதேசகாரன் வந்து சம்பாரித்து பணத்தை உங்களுக்காடா கொடுக்கிறான்? பங்களாகாரன் இன்றைக்கு மலேசியாவில் சிறந்த வாழ்க்கை வாழுறான்… தமிழன் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறான்…
kayee ammu ,அவர்களே ஒரு மனிதனை பிடிக்க வில்லை என்று சொல்ல உமக்கு அருகதை கிடயாது ! ரஜினி ஆண்டவனால் படைக்கபட்ட ஒரு உயிர்… ஆண்டவன் ஒருவரால் தான் பிடிக்கிறதோ பிடிக்க வில்லை என்று சொல்ல… நீ யாரு ? அதை பற்றி சொல்ல?
இன்னுமா ரஜினியை நோண்டிகிட்டு இருக்கேங்க…. வேல வெட்டி இல்லையா உங்களுக்கு…!
இதோட கருத்து சொல்வதை நிறுத்துங்க
தமிழன் என்று நாங்கள் இனவெறியில் கூறுவதாக சில வெறியர்கள் குறைக்கின்றனர்! இவர்கள் தமிழர்களாக இருக்கமாட்டார்கள். எம்மினத்திற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். அதை கேட்பதற்கும் குறை சொல்வதற்கும் யாருக்கும்; உரிமை இல்லை !
தமிழன்டா நான்! என் தாய் மீது சத்தியம்! நான் சுத்த தமிழன்! எனக்கு இனவெறி கிடையாது! வாழு மனிதனாக வாழு! இனவெறி பிடித்த தமிழனா வாழாதே!
தமிழன் இனவெறியன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்ற! நாங்கள் இனவெறியர்களாக இருந்தால் எப்படி வேற்று இனத்தவர் எல்லோரையும் வாழவெச்சதும் இல்லாம ஆலவும்வெச்சு, வேற்று இனத்தவர் பண்டிகைக்கும் அராசு விடுமுறை கொடுக்க அனுமதிச்சோம்! …கர்நாடகாவில் ஒருகோடி தமிழன் இருக்கிறான் ஒரு அமைச்சர் பதவி கொடுப்பானா கன்னடன்??? பொங்கல் விடுமுறை??? இதெல்லாம் என்னடா வெறி… இதோட தமிழனை குரை கூருவதை நிறுத்துங்கள்!
கண்ணுங்களா நான் வெறும் நடிகன், நடிப்புத் தொழிலைத் தவிர எனக்கு வேற ஒண்ணுமே தெரியாது, என் நடிப்பிலே ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் சரி செய்து விடுகிறேன், கர்நாடக காரன் தண்ணி கொடுக்க வில்லைன்னா நான் என்ன செய்ய முடியும்? தண்ணி பிரச்சனைன்னா அதுக்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நடிகனாகிய நான் என்ன செய்ய முடியும்? என்னை வளர்த்து விட்டவர்கள் தமிழர்களாகிய நீங்க, நீங்களே என்னை சாகடித்தால் எப்படி? தமிழ் நாட்டிலும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களிடம் போயி உங்கள் குறைகளை சொல்லுங்கள், நான் பொழப்பு தேடி வந்த சாதாரண ஒரு வெறும் நடிகன்தான், சினிமாக்காரனை சினிமாக்காரனாகவே பாருங்கள், அரசியல்வாதியை அரசியல்வாதியாகவே பாருங்கள், தேங்க்ஸ் கண்ணுங்களா… வர்ட்டா…
நேத்ரா அவர்களே கமலஹாசன் எவ்வளவோ மேல் என்றா சொன்னீர்கள்? கமல் அவர்கள் 1972டில் மலேசியாவில் ஒரு தங்கும் விடுதியில் மலேசிய பாடகியை பார்த்து படு; மோசமான கெட்டவார்த்தையில் திட்டினாரே மறந்து போச்சா? நடிகர் மோகன் 1980களில் கொடிக் கட்டி பறந்த போது தமிழன் கமலஹாசன் அவருக்கு கொடுத்த பிரச்சனையும் இம்சையும் மறந்து போச்சா! இறுதியில் நடிகர் மோகன் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தது மறந்து போச்சா? அந்த காலகட்டத்தில் கமலை பார்க்கச் சென்ற மலேசிய ரசிகர்கள் அப்போ கமல் வீட்டில் இருந்து கொண்டே நான் வீட்டில் இல்லை என்று பொய் சொல்லி ரசிகர்களை விரட்டியது மறந்து போச்சா? காஷ்மீர் காதலி என்ற படத்தில் நடித்த கதாநாயகனை தமிழ் படத்தில் நடிக்க விடாமல் தூரோகம் செய்தது மறந்து போச்சா? இதை எல்லாம் தமிழனால்தான் செய்ய முடியும்? சொல்லுங்க எவன் எவ்வளவோ தேவலாம் என்று!
மோகன் உனக்கு கமல்ஹாசன் புடிக்க வில்லை எண்றால் சும்மா இரு எதற்கு ரஜினிக்கு ஜால்ரா துக்குர,தமிழ் நாட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள் ரஜினியின் லட்சணத்தை ,தன் ரசிகர் மன்றத்தை மக்கள் சேவைக்காக உட்படுத்திய முதல் நடிகர் கமல்தான்,நடிகர் மோகன் சினிமாவை விட்டு போனதுக்கு இவர்தான் காரணமா ,என்னங்கடா பூர்டா விடுறிங்க
கமலஹாசன் வண்டவாளம் என் கையில் உள்ளது…மெகா நைட்ஸ் 2002டில், கமல் ரஜினி உள்பட பெரிய நடிகர் பட்டாளமே மலேசியா வந்தது…அப்போது ரஜினியை பார்க்க வந்த ஒரு மூதாட்டி காலை 4 மணியிலிருந்து ரஜினியை பார்க்க வேண்டும் என்ற ஆவளோடு அவர் வரும் வரையில் காத்து இருந்தார், ரஜினியும் வந்தார், அவர் யாரையும் பார்க்க வில்லை அந்த 65 வயதான அம்மாவை பார்த்து நலம் விசாரித்தார், அந்த அம்மாவின் மகன் ஒரு வக்கீல், கமலை பார்க்க வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர், அப்பக் கூட கமல் சிம்ரனுடன் ஒரு அறையில் உரையாடிக்கொண்டு இருந்தார் அப்ப ரேலா காரர்கள் கமலை பார்க்க அனுமதிக்கவில்ல, கேட்டதற்கு கமல் ரசிகர்களை பார்க்க நேரம் இல்லையாம் என்று அந்த ரேலா காரர் ஒருவர் ரசிகர்களை பார்த்து சொல்லி அனுப்பி விட்டாராம், SESON HOTELலில் நடந்த உண்மை சம்பவம் இது!
மோகன்.. நீங்கள் தமிழ்நாட்டு இரசிகர் மன்ற பாணியில் சிந்திக்கின்றீர்கள்.. நான் யாருடைய தனிமனித உரிமையைப் பற்றியும் கேள்வி எழுப்பவில்லை.. யார் நல்லவன்.. யார் கெட்டவன் என்பது இங்கே விவாதம் கிடையாது.. ரஜினி மனிதருள் மாணிக்கம்.. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செப்பமான சலை அமைத்து மின்னொளி வசதி செய்து விளம்பரமே இல்லாமல் இறைப்பணி செய்து வருபவர்.. இரு பெரும் அருளாளர்களான இராகவேந்திரர் மற்றும் மஹா அவதார் பாபா போன்றோரை உலகுக்கு அறிமுகம் செய்வித்த புண்ணியவான்.. அவரைப்பற்றி பேச எனக்குத் தகுதி இல்லை.. ஆனால், ரஜினி என்ற தனி மனிதனை தற்காக்க ஒரு தமிழனான கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சால்பு இல்லாத மனிதனாக உங்களைக் காட்டுகின்றது.. பரதம், சிலம்பம், வர்மம், நாடகக்கலை, இசை, பாடல், ஆத்திகம், நாத்திகம், நடிப்பாற்றல் என இன்னும் பல தமிழர் சார்ந்த பண்பாடுகளை தம் நடிப்பின் மூலம் வெளிக்கொணர்ந்த கமலஹாசனை உங்களுக்கு தெரியாமல் போனதேன்? நமது நாட்டில் எத்தனை தமிழ்ப்பள்ளிகள் உள்ளன? அவற்றில் எத்தனை அரசாங்க உதவி பெறாதவை? நமது சமுதாயத்தில் எத்தனை பட்டாதாரிகள் வேலையின்றி இருக்கின்றார்கள்? உங்களிடம் தரவுகள் இருக்கின்றதா நண்பா? கமலஹாசனின் வண்டவாளம் உங்களிடம் இருந்து யாருக்கு பயன்?
நேத்ரா அவர்களே மன்னிக்கவும்…நான் தமிழ்நாட்டு இரசிகர் மன்ற பாணியில் சிந்திக்கிறேன்? நீங்கள் கமலை உயர்த்தி விமர்சிக்கிறீர்களே? நானும் சொல்லாமலேயே நீங்களும் தமிழ்நாட்டு இரசிகர் மன்ற பாணியில் சிந்திக்கின்றீர்கள்!!! சரி வேண்டாம் வாக்கு வாதாம், எனக்கு மரியாதை கொடுத்து நீங்கள் எழுதி இருக்கிறீர்கள், எனது மனமார்ந்த நன்றி சகோதரி…சில சமயங்களில் அரசியல் வாதிகல் நாட்டு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார்கள், அதற்காக நடிகனை குறை சொல்லி புண்ணியம் இல்லை… இருந்தாலும் மீண்டும் சொல்லுகிறேன் எனக்கு கொடுத்த அந்த மரியாதைக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கேன்.
கற்றோரிடயே விவாதம் தேவைதான். அனால் அது சச்சரவாக மாறிவிடக் கூடாது.. ரஜினி மட்டுமல்ல. நீங்களும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் தான். நன்றி திரு.மோகன் அவர்களே.
நேத்ரா அவர்களே ! நீங்கள் மோகனை புகழ்வது ம் ம் ம் !அதை விடுங்கள் மோகன் ஒரு உயர்ந்த உள்ளம் என்று சொன்னீரே !இன்று இரவு எனக்கு தூக்கம் வருமா ? சும்மா தமாஸ் !
நண்பர் thamilar nanda அவர்களே நேத்ரா என்னை புகழவில்லை நான் சொன்ன நன்றிக்கு பதிலாக அவர்கள் எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார் ,அதற்காக அவரும் அவர் கருத்தை மாற்றிக்கொள்ள போவதில்லை நானும் போவதில்லை ,ஒருவருக்கொருவர் நன்றி சொல்வது தமிழர்களின் உண்மையான பண்பு ,அந்த பண்பை கூட சில சமையங்களில் நான் கடைப்பிடிப்பதில்லை மாத்திரம் வரும் பொழுது முட்டல் தனமாக எழுதிவிடுகிறேன் ,,
உங்கள் அனைவரின்
கருதுக்களை
படித்தேன்
,தெரிந்தது என்னவோ தமிழின் அருமை. உங்கள் அனுமதியோடு ஒன்னு சொல்லிகொள்ள
விரும்புகிறேன், இக்கால கட்டதில் நம்மை நாம் காப்பற்றி கொள்வதே சிரமம் , எப்படி மற்றவரை காப்பாற்றுவது?
ஒவ்வொரு தமிழரும் தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்தல், இந்த சமுதாயம் சிறப்பாக இருக்கும்.
இன்றைக்கும் அடுத்தவங்க என்ன செஞ்சாங்க கேட்கிறோம், அனால் நாம எத்தனை பேருக்கு உதவி செய்யுறோம் என நினைச்சி பார்க்க மாற்றோம். நாமும் முன்னால் மாணவர் சங்கம் அமைத்து நாம் படித்த பள்ளிக்கு வேண்டிய உதவிகள் செய்கிறது இன்னும் ரொம்ப நல்லதுதானே….
நான் எதாச்சும் தவற சொல்லி இருந்தா மன்னியுங்கள், நண்பர்களே !!!