சமீபத்தில் ‘சுவடுகள்’ என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. ஜெய்பாலா என்பவர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மோனிகா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு இன்னும் என்னென்ன வேலைகள் மிச்சமிருக்குமோ, அத்தனையும் இந்த ஒருவரே பார்க்க, படத்தின் மிச்ச சொச்ச வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
விழா முடிந்து நிருபர்களின் கேள்வி நேரம் ஆரம்பித்தது. அங்குதான் வந்தது வினையே! ஒரு மூத்த நிருபர், ‘இந்த படத்தின் ஹீரோவே நீங்கதான்னு சொல்றீங்க. ஆனால் உங்களுக்கு வழுக்கையெல்லாம் விழுந்து ஐம்பது வயசு ஆகியிருக்கும் போலிருக்கே’ என்றார் அசால்ட்டாக. பக்கத்திலிருந்த ஜெய் பாலாவின் மனைவிக்கு பொசுக்கென கோபம்
வந்துவிட்டது. (பின்னே வராதா?) ஏங்க, ரஜினிக்கும்தான் வழுக்கை விழுந்திருக்கு. பேத்தி வயசுள்ள பொண்ணுங்களோட டூயட் பாடி ஆடுறாரு. அதையெல்லாம் பொருத்துக்கிறீங்க. இதை பொருத்துக்க மாட்டீங்களா என்று கோபப்பட, அதோடு விட்டாரா நிருபர். ‘அப்ப இவரும் ரஜினியும் ஒண்ணா?’ என்று கட்டிங் பிளேயரை திருப்ப, ஆத்திரத்தில் பொங்க ஆரம்பித்தார் திருமதி ஜெய்பாலா.
‘ரஜினின்னா பெரிய இவரா? எங்களை மாதிரி இருக்கிற ஈழ தமிழர்களுக்கு என்ன செஞ்சாரு? அவரு சம்பாதிச்சு அவரோட குடும்பத்துல உங்களவங்களை வாழ வச்சாரு. நாட்டுக்கு என்ன செஞ்சாருன்னு சொல்லுங்க பார்ப்போம்’ என்று எகிற, நிருபர் கப்சிப்!
தமிழர் நந்தா அவர்களே.. நீங்களும் சரி திரு.மோகனும் சரி. இருவருமே என்னை சாடி எழுதவில்லை. அந்த பண்பு எனக்கு பிடித்திருக்கின்றது. நானும் உங்களைப் போலத்தான். சரி என்று பட்டதை நேர்பட எழுதுவேன். தவறு எனத் தெரிந்தால் தலைவணங்குவேன். உங்கள் உறக்கத்தை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம் நண்பரே.. ஹா.. ஹா.. ஹா..