கொடைநாட்டில் தங்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை தலைவா படம் வெளியிடவுள்ள நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் வந்தததால், இப்படத்தை திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும், பொலிஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், முதல்வரைச் சந்தித்து விளக்கமளிக்கவும் அவரது ஆதரவைக் கேட்கவும் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகருடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாவம் இந்த பையன்
இவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். ஜெயலலிதவ ஆதரிச்சா இப்படிதாண்ட உன்கோய்யல.. காவலன் படத்துல, இப்ப நான் ஆளும் கட்சின்னு சொல்லித்து ஓடினியே என்னாச்சு? சொந்த காசுலேயே சூனியம் வெச்சிகிட்டன் மாப்பிளை..
இது தமிழனுக்கு ரொம்ப முக்கியமான விஷயமா விஜய் தலைகனம் பிடித்தவன் kl வந்தபோது வாசகர்களை மதிக்காமல் படம் காட்டியவந்தானே ?
அப்பனும் மகனும் கலைஞருக்கு செய்த துரோகத்திற்கு தான் இப்போது மானம் கேட்டு நிற்குரானுங்க. படட்டும், இன்னும் படுவானுங்க.
அப்பனும் மவனும் வீனாப்போனவணுங்க ,தமிழனை மதிக்க தெரியாதவனுங்க ,சரி அத வீடுங்க ,,,விஜய் ஒரு தமிழனாக இருந்தும் தன் நடித்த தமிழ் படத்துக்கு சொந்த தமிழ் நாட்டிலேயே ஓட வீட மாட்டிகிராங்கனா ,இப்பதான் தெரியுது ரஜினி ஏன் அரசியலுக்கு வர மாட்டிகிராருன்னு ,இந்த தமிழ் நாட்டுக்காரனுங்க்கள நம்பவே முடியாது ,இன்னிக்கு ஜே போடுவானுங்க நாளைக்கு போடா என்று சொல்லிட்டு போவானுங்க ,இவனுங்கள நம்பினால் நடு ஆத்திலே விட்டுட்டு வந்திடுவானுங்க ,மலேசியயாவிலும் இதே கதிதான் !அரசாங்கம் தமிழர் மீது அதிகம் நம்பிக்கை வைப்பதில்லை !