காதலுக்காக பெற்றோர்களை தூக்கி எறியும் பிள்ளைகள், பெற்றோர்களுக்காக ஏன் காதலை தூக்கி எறியக்கூடாது.
இதுதான் ரெட்டவாலு படத்தின் அழுத்தம் திருத்தமான கேள்வி. (பலே வெள்ளையத் தேவா…) காரணமே இல்லாம சிரிச்சுட்டு போங்க என்கிற ட்ரென்ட் இப்போது நிலவி வருகிறது கோடம்பாக்கத்தில். சமீபத்தில் வெற்றி பெற்ற படங்களில் பாதிக்கு மேல் இப்படிதான் இருக்கிறது.
இந்த நேரத்தில் வலுவான கதையோடும், வாகான மெசேஜோடும் ஒரு படத்தை யோசிப்பதே கவுரவம். ‘அப்படியொரு கவுரவமாக என் படமும் இருக்கும்’ என்கிறார் ரெட்டவாலு டைரக்டர் தேசிகா.
அகில், சரண்யா நாக் இவர்களுடன் தம்பி ராமய்யாவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறாராம். சரண்யாவின் அப்பா இவர்தான். க்ளைமாக்சில் இவர் பேசும் வசனம் அதிரடி முடிவுகளை எடுத்து அப்பா அம்மாக்களை அழவிட்ட பிள்ளைகளுக்கு படிப்பினையாக இருக்கும் என்கிறார் தேசிகா.
இயக்குனர்கள் அவர்கள் எடுக்கும் திரைப்படங்களில் காதல் தான் பெரியது மற்றதெல்லாம் தேவை இல்லை என்று காமிப்பார்கள்,தாங்கள் பாதிக்கும் பொழுது தான் தெரியும் வழியும் வேதனையும், அண்மைய எடுத்து காட்டுக்கு இயக்குனர் சேரன் அவர்குடும்ப சம்பவம் சந்தியில் சிறிய சிரித்தது.
போலிக்காதலில் ஏற்படும் விளைவுகளை வெளிச்சத்துக்கு காட்டும் திரைப்படங்களை வெளியிட்டால் நாடும் சமூகமும் ருப்படும்…ஆனால் திரைப்படம் ஓடுமா என்பதே பெருங்கேள்வி!!!!!
பெற்றோர்களுக்காக ஏன் காதலை துக்கி எறியக்கூடாது.? எதுக்கு எறியணும்…இவர்கள் செய்த காதல் தவற்றினால் தானே பிள்ளைகள் பிறந்தார்கள்!