தமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன். என நகைச்சுவை நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்துச்செழியனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இது எங்கள் தேவர் சமுதாயத்தின் குடும்ப விழா. எங்கள் தேவர்கள் குடும்ப விழா. எங்கள் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க உள்ள தேவர் குடும்பங்களை ஒரே குடும்பமாக இணைத்து வருகிறோம்.
தமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன்.
அவர்கள் பி.இ, எம்.பி.ஏ போன்ற உயர்படிப்பு படிக்க அனைத்துவித உதவியும் செய்து வருகிறேன்.
இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
இனியும் தொடர்ந்து செய்வேன்.
எனவே படிக்க ஆர்வம் இருந்து,பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை என்றால் தயங்காமல் கருணாஸை வந்து பார்க்கலாம்.
அவர்களுக்காக என் வீட்டு கதவு திறந்தே இருக்கும். என்றார் நகைச்சுவை நடிகர் கருணாஸ்.
எங்கள் மலேசியா கலைஞர் , பாடகர் – சமீபத்தில் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார் . இவரை சினிமாவில் நடிக்கவைகிறேன் என்று ஆசை காட்டி கொள்ளை அடித்த பணம் ஞாபகம் இருக்கா கருணாஸ் ? லட்ச கணக்கில் ஏமாற்றிவிட்டு இப்போ உதவி கரம் நீடுரீங்களோ? ஊரை ஏமாற்றலாம் , உண்மையை மறைக்க முடியாது , அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் !!
நல்லதைச் செய்தால் நாங்கள் பாராட்டுகிறோம். கெடுதலைச் செய்தால் ஆண்டவன் பார்த்துக் கொல்லுவார்.
கூத்தாடி பயலே கருணாஸ் ! இலங்கையில் போருக்கு பிறகு எந்த நடிகரும் மேடை நிகழ்ச்சி செய்ய இலங்கைக்கு போகக்கூடாது என்று திரைப்பட ஊழியர் சங்கம் சொல்லியும் இலங்கைக்கு போவேன் என்று அடம்பிடித்தவந்தானே நீ , இதுல தேவர் குல நிகழ்ச்சியாம்…. கருணா என்ற பெயரே தமிழ் இனத்துக்கு ஒத்துவராத பெயர் !
இவன் எல்லாம் ஒரு ஆளு ..விளம்பரத்துக்காக இந்த செய்தி !!!!!!!!!!!!