நடிகர் பரத்தின் திருமணம் கோலகலமாக நேற்று நடைபெற்றது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத்.
இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான பல் மருத்துவர் ஜெஸ்லி ஆகிய இருவருக்கும் திருமணம் 09.09.2013ம் திகதி பெற்றோர் முன்னிலையில் நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 14 அன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடக்கிறது.
திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
வாழ்த்துகள்!
அட, தமிழ் படத்தில் நடித்து பொழப்பு ஓட்டுறேங்க, ஆனால் ஒரு தமிழ் பெண்ணை கல்யாணம் செய்ய மனம் கலங்குகிறதா??? இருந்தாலும் வாழ்த்துகள்!!!!!