கந்து வட்டி கொடுமை: துணை நடிகை தற்கொலை முயற்சி!

10dsindகந்து வட்டிக்காரர்கள் பணம் கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழ்த் திரைப்பட துணை நடிகை தா.கௌரி என்ற cந்து  சென்னைப் பெருநகர காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

இது குறித்து அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் “ஐ.நா.’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப் படத்தை எடுப்பதற்கு போதிய பணம் இல்லாததால் புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, வசந்தி ஆகியோரிடம் ரூ. 4 லட்சத்தை, 20 சதவீத கந்து வட்டிக்கு கடன் வாங்கினேன். அவர்களின் பணத்துக்குரிய வட்டியைச் சரியாக செலுத்தி வந்தேன். இதற்கிடையே இப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் வெளிநாடு சென்றதால், படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் உள்ளது.

இதனால் என்னால் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. பணத்தை கொடுத்தவர்கள் என்னை துன்புறுத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டி வருகின்றனர். இதனால் கடந்த 6-ஆம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான் அங்கு சிகிச்சை பெற்று வந்தேன்.

இந்நிலையில் கந்து வட்டிகாரர்கள் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா என்ற வசந்தி ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகார் அளித்த சிந்து, “அங்காடி தெரு’, “பரதேசி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.