கே.பாலச்சந்தரின் இறுதி ஊர்வலத்தில் திரளாக திரண்ட திரையுலகினர் மற்றும் மக்கள்

1rajiniஇயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் மரணமடைந்ததையொட்டி ஏராளமான திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த தன்னை அறிமுகப்படுத்திய குருவான கே. பாலச்சந்தரின் இறுதி அஞ்சலியில் குடும்பத்துடன் கலந்து கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

அதே போல் நடிகர் கமலஹாசன் குருவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ersEo-LaU2s

கே.பாலச்சந்தரின் இறுதி ஊர்வலத்தின் புகைப்படத் தொகுப்பு

-http://www.tamilwin.com