இந்தியாவிலேயே வாழ முடியாத மோசமான நகரமாக டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இசிஏ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் எவை என்ற ஆய்வை நடத்தியது.
இதில் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் பெங்களூரூ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரூ 171வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நகரங்களில் பெங்களூரூ 171வது இடத்திலும், சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் 182வது இடத்திலும் டெல்லி 204வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் வாழ முடியாத மிகவும் மோசமான நகரமாக தலைநகர் டெல்லி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சிறந்த நகரங்களில் பட்டியல் குறித்த ஆய்வு தனிநபர் பாதுகாப்பு, அரசியல், காற்று, வானிலை, சுகாதாரம் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
உலக அளவிலும், ஆசியாவிலும் வாழ மிகச் சிறந்த நகரமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, அடிலெய்டு உள்ளிட்ட நகரங்கள் வரிசையாக உள்ளன.
-http://www.newindianews.com
























