தேர்தலில் வெற்றி பெற யாகமா?

  கி. சீலதாஸ், மே 17, 2016.   ஜனநாயகம்  என்றால் மக்களின்  ஆட்சி என்று பொருள்படும்.  மக்கள் நேரிடையாக ஆட்சி செய்வதில்லை.  ஆனால் தங்களை (மக்கள்)  ஆளுவதற்கான தகுதியை,  அதிகாரத்தை சிலருக்குத் தந்துவிடுவார்கள்.  அதாவது தேர்தல் வழியாக நாடாளுமன்றம்,  அல்லது சட்டமன்றங்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவது…

சேவியர்: போலீசார் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வதை ஐஜிபி உறுதி…

  ஈப்போவில் ஓர் இந்து கோயிலில் புகுந்து சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று கோரியுள்ள போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முதலில் போலீசாரின் செயல்கள் முறையானதா, போலீசார் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.   நாட்டில்  அச்சம், சந்தேகம்…

நாட்டுக்காக ஒன்றுபடுவோம், மலேசியாவைக் காப்போம்!

  -டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்.   நமது மலேசிய நாட்டின் மீது  அக்கறையும் பற்றும் கொண்ட எந்த மலேசியராலும் அல்லது அவர் குடும்பம் மற்றும் தனது பிற்கால சந்ததியின்  எதிர்காலத்தின் மீது அக்கறைக் கொண்ட எவராலும் இந்நாட்டு பிரதமர்…

ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகம் காண்கிறது

- கி .தமிழ்செல்வன், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஏப்ரல் 13, 2016. ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. கொள்கை அடிப்படையில் பதிவு பெற்ற பி. வேதமூர்த்தியின் பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பிலிருந்து அதன் முக்கிய…

ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக வேண்டும்!

மக்கள் பிரச்சனைகளுக்கு நிறைவான தீர்வை விரும்பும் எந்த ஓர் இயக்கமும் தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது  பெரும் தவறு. அவ்வாறு தனிமனிதனுக்கு முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் ஓர் இயக்கத்தின் நோக்கமே பணயம் வைத்துவிடப்படக்கூடிய ஆபத்து  நிகழலாம்.  ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது…

நஜிப்பின் தலைவிதியை நிர்ணயிக்கும் குடிமக்கள் பிரகடனம்

-ஜீவி காத்தையா. மார்ச் 26, 2016. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று உலகின் பிரசித்த பெற்ற, அதாவது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்ற வகையில், தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. அவருடைய தலைமையில் இயங்கி வரும் 1எம்டிபி நிதி ஊழல் விவாகரங்கள் உலகத்தின்…

ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாகும்!

வேதமூர்த்தி தலைமையேற்றிருக்கும் பதிவுபெற்ற பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (PHM) அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத  கொள்கை பிளவைத்  தொடர்ந்து, அவ்வமைப்பிலிருந்து  வெளியேறிய 7 தேசிய நிலையிலான தலைவர்கள், வறுமையில் உள்ள  மலேசிய இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளுக்கு தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர்…

கம்போங் மேடான் வன்முறைக்கு இடைநிலை நீதி வேண்டும்!, கா. ஆறுமுகம்

  இந்தியர்களுக்கு எதிரான கம்போங் மேடான் வன்முறை சம்பவம் நடந்து  இன்றோடு பதினைந்து  ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். வெட்டுக் காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம்…

வங்காளத் தேசத் தொழிலாளர் இறக்குமதி இந்தியர்களுக்கு ஆபத்தாக அமையும்!

சுமார் 15 லட்சம் தொழிலாளர்களை வங்காளத் தேசத்திலிருந்து அரசாங்கம் வரவழைக்கப்போவதாக துணைப் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இதை கட்டம் கட்டமாக நடைமுறை படுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சருமான அமாட் ஸாஹிட்   ஹமிடி அறிவித்துள்ளார். சிறுபான்மை இனமாக உள்ள  இந்தியர்களுக்கு இது ஒரு…

மைஸ்கில்ஸ் அறவாரியத்தைச் சாடுவது, அவதூறு நோக்கம் கொண்டது!

மைஸ்கில்ஸ் அறவாரியம் சார்புடைய ஒரு காணொளியைத் தனது முகநூலின் வழி பிரபலப்படுத்திய ஒரு நபர் அது சார்பாக காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளதாக தி ஸ்டார் இணையத்தளம் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தக் காணொளியில் ஒரு மாணவனை மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிர்வாகியான செல்வமலர் இரண்டு முறை அறைவதுபதிவாகியுள்ளது.…

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் முதல் டிஜிட்டல் தமிழ்ப்பள்ளி

மலேசியா, சிலாங்கூர் மாநிலத்துள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அதன் ஆறு வகுப்பறைகளையும் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றியுள்ளது. இப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வழியாகவே நடத்தப்படுகிறது 21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும் என்பது மலேசியக் கல்வி அமைச்சின் திட்டமாகும். அத்திட்டத்தை…

மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம் மூடுவிழா காணுமா?

மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கம்  அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும். பிறகு படிப்படியாக அது மூடப்படும் சாத்தியத்தையும் உருவாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது சார்பாக கருத்துரைத்த ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர்…