இன அழிப்புக்கு எதிரான தற்காப்புப் போராட்டத்தையே தமிழ் மக்கள் முன்னெடுக்கின்றனர்;…

“இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள தேசம் கருதுவதனாலேயே தமிழ் மக்களை இன அழிப்புச் செய்கின்றது. தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இவ் இன அழிப்பைத் தடுப்பதற்கான தற்காப்புப் போராட்டமாகும்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுமைய ‘மே’ தினப்…

சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப்…

நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்

இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும். சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வருடப் பிறப்பு, பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது. அவர்கள், பெரும்…

அரசியல் தீர்வு காணப்படாத நிலையில், 20வது திருத்தத்தை த.தே.கூ ஆதரிக்காது:…

புதிய அரசியலமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு முன், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20வது திருத்தச் சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.…

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மூத்த அதிகாரி…

’முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு’

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான…

விக்னேஸ்வரனின் முதல் சவால்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அல்லது கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு, இந்தியாவுக்குச் சென்றிருந்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இந்த அறிவிப்புக்காக, பல…

மட்டக்களப்பு: நீதி கோரும் போராட்டமும் சிவராம் நினைவேந்தல் நிகழ்வும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டமும், மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர் அமைப்புகள் இணைந்து, நேற்றுக்காலை மட்டக்களப்பு நகரில், கவனயீர்ப்புப்…

விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகளும், இராஜேந்திரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழக்கி…

கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான உங்களின் உறவுகள் மோசமடைந்து வருகின்றன.…

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்கிறது காணாமல் போனோர் பணியகம்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தமது கீச்சகப் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து, தமது திட்டங்கள்…

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில்- இரணைமாதா நகரில் தாம் தங்கியுள்ள பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். எனினும் சிறிலங்கா…

எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு…

“தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. அப்படியான நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது.” என்று நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்தும்…

அனைத்து சமூகத்தினருக்கும் நீதி நியாயம் கிடைக்க வேண்டும்; வெசாக் வாழ்த்துச்…

“புத்தபிரான் புனித காலடி எடுத்துவைத்த இப்பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில் அனைத்தின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் அணி திரளுதல் வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்…

தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

‘தந்தை செல்வா’ என்று ஈழத்தமிழ் மக்களினால் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள, தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா நினைவு தூபிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மலர் மாலை அணிவித்து…

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா…

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலரை நியமிப்பதில், சிறிலங்கா அதிபருக்கு…

திருகோணமலையில் முஸ்லீம் டீச்சரின் அட்டகாசம் ..பொங்கி எழுந்துள்ள தமிழ் மக்கள்…

முல்லைத்தீவில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் , குறித்த ஒரு முஸ்லீம் ஆசிரியையால் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. அவர் இந்துக் கல்லூரியில் வேலை பார்பதால், அதற்கு என்று சில கட்டுபாடுகள் உள்ளது என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் திடீரென முழு பர்தாவோடு பாடசாலைக்கு வந்துள்ளார்.…

இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால்…

கிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ இடத்துக்கு…

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய…

முள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை…

“முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால்…

இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போருக்குப் பிந்திய சூழலில், ஆற்றலைக் கட்டியெழுப்பி, இளைஞர்களுக்கு வலுவூட்டும் நோக்கிலும் இளைஞர்களின் பொதுவான பிரச்சினைகளை முன்வைத்தும், இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைத்து…

தெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய இலங்கை

இலங்கை தெற்காசிய பிராந்தியத்தின் தங்க கடத்தில் மத்திய நிலையமாக மாறியுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மும்பை நகருக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டதை அடுத்த இந்த விடயம் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக…