இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டம்
வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 97,490 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலையினால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியான…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு நீதிமன்றம் தடை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, டீன்ஸ்…
வறட்சியால் சீர்குலையும் சுகாதாரநிலைமை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க மக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சி தொடர்ந்து எதிர்காலத்திலும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. எதிர்காலத்திலும் மாசடைந்த நீரையே அதிகளவில் பயன்படுத்த நேரிடும். இதனால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட பல தொற்றும் ,தொற்றா…
பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்…
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்- உளவுத்துறை எச்சரிக்கை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளா…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை…
நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம்
நாடு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டு நடைமுறை நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். 24 மணிநேரமும் தொடர்ச்சியாக தடையின்றி…
PT-06 ரக விமானங்களை இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்திம்
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து, PT-06 ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது. அக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அந்த…
மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு
அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3,000 மில்லியன்…
இலங்கை பாடசாலை சிறுவர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் அவர் அளவளாவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் யுனிசெவ் அமைப்பின் கௌரவ தூதுவராகவும் செயற்படும் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.…
இலங்கைக்கு ஈரான் வழங்கியுள்ள வாக்குறுதி
இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று (06) தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈரான் - இலங்கை கூட்டு பொருளாதார…
இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ளக்…
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீளஆராயப்போவதில்லை என தெரிவித்துள்ளார். ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நீக்கியுள்ளார். இதற்கு கத்தோலிக்க திருச்சபை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத்…
மீண்டும் கோட்டா கோ கம குழு விடுத்த அழைப்பு!
அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் 'போராட்டத்தின் எதிர்காலம்' என்ற தொனிப்பொருளில் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் செயல்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த தானிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் ஒன்றிணைந்து எதிர்வரும் 06.08.2023 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நடாத்தவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.…
இலங்கைக்கு இந்தியாவிடம் 450 மில்லியன் இந்திய ரூபாய் நோட்டுகள்
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய - இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
13 தொடர்பில் மீண்டும் சர்வ கட்சி மாநாடு
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வ கட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின்போது அரசமைப்பின்…
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் அரசாங்கம்
விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும், எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும், அதில் பணம் சுரண்டப்படுதே இடம் பெறப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டீசல் மாபியாக்கள்,…
நில உரிமையற்று வசிக்கும் 15 000 பேருக்கு உறுதிப்பத்திரம் வழங்க…
கொழும்பு ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (02.08.2023 ) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும்…
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க கூடாது
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது மிகப்பெரிய தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது, தேசிய கீதத்தை ஒவ்வொருவரின்…
இலங்கையில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் – நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருட ஆரம்பத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில், நாட்டின் அனைத்து சிறைகளிலும் 13,241 கைதிகள் அடைக்கப்படலாம், ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 29,000…
சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளையும் புதுமையான திட்டங்கள்
சுற்றுலா அமைச்சர் டயானா கமகே கூறுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இலங்கைக்கு 763,000 சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வருகையை வரவேற்றுள்ளதுடன், சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களின் கணிசமான வருமானத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளதாக தெரிவித்தார். சுற்றுலாத்துறையின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி…
நிலா அபகரிப்பை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு - அக்கரைவெளி நிலா அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று மாலை 4 மணி அளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம்…
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இலங்கை- இந்தியா இணைப்பு அவசியம்
பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கும், இந்தியாவிற்கும் செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள், பாலங்கள், குழாய்கள், மின்சாரம்…
வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது
வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மகாவலி 'எல்' என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து கள விஜயம் செய்ததன் பின்னர் இன்று (01.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…