போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் மாணவ சமூகம்

நாட்டில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்ற விடயமானது பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. அந்தவகையில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிறிலங்காவில் சுமார் 50,000 பேர் இருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்காரவே இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஐஸ் போதைப்பொருள் பரவி…

இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் இந்தியாவோடு கைகோர்ப்போம்

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி,…

தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவு வழங்கத் தயார் – ஜப்பான்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா , தொடர்ச்சியான காலங்களிலும் இலங்கைக்கு  ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் கடன் வழங்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய…

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் ஆரம்பமானது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. இன்று காலை…

கறுப்பு ஜுலையின் 40 ஆவது நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று 4.30 மணியலவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா,…

மாகாண சபை தேர்தல் தேவையில்லை

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு…

எதிர்காலத் தமிழினத்துக்காக இணைந்து போராடுவோம்: கடையடைப்புக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவு

தங்கள் தேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை வெள்ளிக்கிழமையைத் துக்க நாளாக அறிவித்துள்ளனர். அதை ஆதரித்து தாம் கடையடைப்பு செய்ய  உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

அரசாங்கம் தற்போது தேசிய முன்னுரிமைக்கு செவிசாய்க்க வேண்டும்

ஜனாதிபதி நேற்று சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள் ஊடாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், ஜனாதிபதியின் நேரடி உத்தரவுகளை மாகாண சபைகளில் ஆளுநர்கள் ஊடாக எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது தேசிய…

13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே எனது…

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில்…

சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவரானார் மைத்திரிபால சிறிசேன

சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கம்போடியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். உலக சமாதான மாநாட்டின் அழைப்பின் பேரில் சென்றிருந்த அவர் நேற்று இரவு(25.07.2023) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் கம்போடியாவில் நடைபெற்ற தேர்தலில் சர்வதேச பார்வையாளராக  பங்கேற்றிருந்தமை…

கனேடிய பிரதமரின் கூற்றினை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதாயங்களை இலக்காகக் கொண்டது எனறும்…

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் குண்டுகளை வீசிய காவல்துறையினர்

தற்போது கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.         -ad

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.         -ad

ரணிலின் 13க்கு வலுக்கும் எதிர்ப்பு: சர்வகட்சி மாநாட்டை குறிவைத்துள்ள தமிழ்…

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எதிராளிகளை கணித்து தனது காய்களை நகர்த்திவரும் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சர்வகட்சி மாநாட்டிற்க்கான அழைப்பை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுத்திருந்தார். இந்திய விஜயத்தின் பின்னணியில் உள்ள வெளிவராத சில விடயங்களை ரணில் வெளிப்படுத்துவாரா? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க சில அரசியல் கட்சிகள்…

வழங்கப்படும் சேவைகளை சீராக கொண்டு செல்ல வரிக் கொள்கை அவசியம்

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளக்கூடாது என  வடக்கின் ஆளுனர் திருமதி சார்ளஸ் வலியுறுத்தியுள்ளார். வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்றது.…

மட்டக்களப்பில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல்…

இலங்கைத் தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான ப​ரிசீலனையை எதிர்வரும் 26 ஆம் தேதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது…

இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

"இந்தியா - இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது என்றும் அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்" எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின்போது இலங்கையையும் இந்தியாவையும் நில ரீதியாக…

இந்திய – இலங்கை கொள்கைகளுக்கு: தமிழ்த் தரப்பு ஆதரவு

இந்தியப் பிரதமரின் 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல் போன்ற அறிவிப்புக்கள் தொடர்பிலும், இந்தியா - இலங்கை இடையிலான நேரடி நிலத் தொடர்பு உருவாக்கம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதேவேளைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மோடியின் அறிவிப்பைத் தமிழ்த் தேசிய…

13 ஆவது திருத்தச் சட்டம் எல்லோருக்கும் நல்லது

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த…

மிகப்பெரிய தூதுக்குழுவுடன் இலங்கை விரைகிறார் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்

மிகப்பெரிய தூதுக்குழுவுடன் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோசிமசா அயாஸி இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அடுத்த வாரம் இலங்கைக்கு…

ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சற்று முன்னர் சந்தித்தார். இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார…

இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்

இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது ஏதேனுமொரு விஷயத்தை மையமாக…